Saturday, December 01, 2012

புதனில் பல பில்லியன் தொன்கள் தண்ணீர் ஐஸ்கட்டி வடிவில்.

எமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அண்மித்த வெப்பமான கோள் எனக் கருதப்படும் புதனில் அதன் துருவப் பகுதியில் ஐஸ்கட்டி வடிவில் பல பில்லியன் தொன்கள் நீர் உள்ளதாக அதி நவீன ஆராய்ச்சிகள் முடிவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

Messenger neutron and Arecibo radio data at Mercury's pole

[First hints of water came from radio data two decades ago, which Messenger has now shown to be accurate]

அத்தோடு அங்கு அந்த நீர்ப்படலத்தின் மீது.. சேதன இரசாயனக் கூறுகளும் கரு நிறப்படிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நீரும்.. சேதன கூறுகளும்.. சூரியனை நோக்கி வந்த வால் நட்சத்திரங்கள்.. விண்பாறைகள் புதனில் மொத்துண்டு அதன் விளைவாக தோன்றி இருக்கலாம் என்று எதிர்வு கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

புதனில் ஐஸ்கட்டி வடிவில் நீரும்.. பூமியில் இருப்பது போன்றதான சேதன இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்டமையானது.. விண்வெளியில் கோள்கள் பற்றிய புரிதலில் புதிய அத்தியாயத்தை எழுத வைத்திருப்பதோடு.. பூமியில் உயிரினங்கள் தோன்றியதன் பின்னால் உள்ள மர்ம முடிச்சுக்கள் பற்றிய ஆராய்தலில் புதிய திருப்பு முனைகளையும் உண்டு பண்ணியுள்ளது.

Images of Mercury captured by Nasa's Messenger spacecraft (Image: NASA/JHU Applied Physics Laboratory/Carnegie Institution)

[Images captured by Messenger have already revealed surprising details about the planet]

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:32 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க