Sunday, January 13, 2013

No keyboard,No mouse,No touch கணணியோடு நாம் தொடர்பாடல் செய்ய முடியுமா !?..முடியும்.

 Leap motion.. புதிய தொழில்நுட்பம் மூலம்.. கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ளும் (Interact) புதிய வழிமுறை பிறந்துள்ளது.

இவ்வளவு காலமும்.. விசைப்பலகைகளும் (Keyboard).. கணணி எலிகளும் (Mouse).. தொடுதிரைகளும் (Touch screen) கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ள உதவின. அந்த நிலைமாறி.. எனி கமராக்களும் லேசர்களும் (IR) கொண்டு ஆக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம்.. மனிதனின் விரல் அசைவுகளே போதும் கணணியோடு தொடர்புகொள்ள என்ற நிலை தோன்றியுள்ளது.

அண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை லண்டன் O2 மிலேனியம் டோமில் உள்ள நிசான் காட்சியறையிலும் பார்த்துப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கும் நேரடியாகக் கிட்டியது. மிகவும் வசதியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இதில் உள்ள சுகாதார நன்மை என்னவெனில்.. விசைப்பலகைகள்.. எலிகள்.. தொடுபரப்புக்களில் கைகளை.. விரல்களைப் போடுவதால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளும்.. இதன் மூலம் தவிர்க்கப்படலாம்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:26 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க