Friday, September 26, 2003

நமது செல்லப் பிராணிகளில் ஒன்றான நாயின் ஜீன்கள் முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்...இதன்படி நாய் ,மனிதனுடன் நெருங்கிய பாரம்பரியத் தொடர்பை எலிகளைவிடக் கூடிய அளவில் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்....! ஆனாலும் எலிகள் தான் பரினாம வளர்ச்சிப் பாதையில் எம்மோடு அதிக தூரம்/காலம் சேர்ந்து பயணித்துள்ளனவாம்...! நாயில் 2.4 பில்லியன் நைதரசன் உப்பு மூலச் சோடிகள் உள்ளன என்றும் இது மனிதனில் உள்ளதைவிட சுமார் 0.5 பில்லியன் குறைவு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்...ஜீன் வரிசைப்படுத்தலில் நுண்ணங்கிகள் தவிர மனிதன் எலி என்று தற்போது நாயும் இணைந்து கொண்டுள்ளது...!

--------------------------------------------

நாய் பற்றிய இன்னும் ஒரு செய்தி...தந்தது வெப்புலகம் டொட் கொம்...செய்தியுடன் அருகில் உள்ள படத்தையும் பார்க்க...!

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாய்தான், உலகிலேயே மிக நீளமான காதுகளைக் கொண்ட நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த நாயுடைய காதின் நீளம் என்ன தெரியுமா? 29.2 செ.மீ. இங்கிலாந்தில் வசித்து வரும் இந்த நாயின் உரிமையாளர் இதன் காதுகளை பல லட்சம் மதிப்பிற்கு காப்பீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பதிந்தது <-குருவிகள்-> at 7:11 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க