Saturday, September 27, 2003

மொத்தம் ஆறு செயற்கைக் கோள்களைச் சுமந்து கொண்டு ஒரு ரஷ்சிய உந்து வாகனம் விண்ணிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது..இதில் இரண்டு ரஷ்சிய இராணுவச் செயற்கைக் கோள்களும்..நைஜீரிய...பிரித்தானிய ...தென்கொரிய...துருக்கிய செய்மதிகள் தலா ஒன்று வீதமும் உள்ளடங்குகின்றன...இவை இன்று ஏவப்பட்டுள்ளன(27-sep-2003).
------------------------------------------------------
அதேவேளை ஐரோப்பா சார்பில் சந்திரனுக்கான விண்கலம் (SMART-1 Moon exploration probe) ஒன்றையும் மேலும் இரண்டு செயற்கைக் கோள்களையும் சுமந்து கொண்டு European Ariane-5 rocket தென் அமெரிக்காவில் உள்ள French Guiana இல் இருந்து இன்று விண்ணிற்குச் செலுத்தப்பட்டுள்ளது...!

செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் ஒன்று இந்தியாவுக்கும் மற்றையது பிரான்ஸிற்கும் உரியது...இந்தியச் செயற்கைக் கோள் INSAT 3-E எனப் பெயரிடப்பட்டுள்ளது...சந்திரனுக்கான கலம் 370 கிலோ நிறையுடையது...அது தனது 15 மாதப் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது...அதன் முக்கிய குறிக்கோள்..சந்திரனில் நீர் மற்றும் பனிப்படலம் பற்றிய ஆய்வு செய்வதும் சந்திரனின் தோற்றம் பற்றி ஆராய்வதுமே அகும்...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:29 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க