Tuesday, December 09, 2003

செவ்வாய் நோக்கிய ஜப்பானின் பயணம் கண்டதென்ன...

ஜப்பான் செவ்வாய்க்கனுப்பிய Nozomi probe , செவ்வாயை மிக மிக அண்மித்த (550 miles from Mars' surface) தனது திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையமுடியாது தொடர்ந்தும் விண்ணில் சஞ்சரித்தபடி உள்ளதாகவும் இதை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பும் முயற்சிகள் எரிபொருள் பற்றாக்குறையால் தோல்வியடைந்திருப்பதாகவும் ஜப்பானிய விண்ணியல் ஆய்வு மையம் (JAXA) இன்று அறிவித்துள்ளது....! ஜப்பானின் இந்த Nozomi probe சூரியப் புயலின் தாக்கத்தாலும் பழுதடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது...எனினும் ஜப்பான் Nozomi probe ஐ வேறு நோக்கத்திற்காக தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது....! எனினும் இது செவ்வாயுடன் மோதி விபத்துக்குள்ளாகும் சாத்தியக் கூறுகளும் பிரேரிக்கப்படுகின்றன...!

இப்படியான விண்கலங்களை (probes) செவ்வாயை நோக்கி, ஜப்பானை விட, ஐரோப்பிய நாடுகளின் சார்பில் பிரித்தானியாவும் மற்றும் அமெரிக்காவும் அனுப்பியுள்ளன என்பதும் குறிப்படத்தக்கது...!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

===============================================

அதே வேளை நாசா நிறுவனம்,தனது முதலாவது, அணுசக்தியில் இயங்கவல்ல தன்னியக்க ஆய்வுக்கலம் (Jupiter Icy Moons Orbiter or Jimo) ஒன்றை வியாழனின் துணைக் கோள்களைப் (Callisto, Europa and Ganymede) பற்றி ஆய்வு நடத்த எதிர்காலத்தில் அனுப்பத் திட்டமிட்டு வருகிறது...இத்திட்டம் 2011 அளவில் செயல்வடிவம் பெறக்கூடும்...!
இத் துணைக் கோள்களில் (வியாழனின் சந்திரன்கள்) சமுத்திரங்களும் பனிக்கட்டிகளும் இருப்பதாகவும் அத்துடன் இவை உயிரினங்கள் வாழத்தக்க இடமாக இருக்குமா எனவும் ஆய்வுகள் நடை பெறவுள்ளன...!

பதிந்தது <-குருவிகள்-> at 4:47 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க