Wednesday, December 22, 2004

கன்னிப் பயணத்தில் பாரிய உந்துவாகனம்...!



அமெரிக்க போயிங் நிறுவனம் (Boeing) தயாரித்த 70 m உயரமுள்ள பாரிய உந்துவாகனமான டெல்ரா 4( Delta 4) தனது கன்னிப் பயணத்தை புளோரிடாவில் உள்ள அமெரிக்க வான்படை ஏவுதளத்தில் இருந்து பல்கலைக்கழக ஆய்வுக்கான இரண்டு செயற்கைக் கோள்களுடனும் போலித் திணிவுக் கூறுடனும் விண் நோக்கி ஆரம்பித்துள்ளது...!

இது முதலில் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உந்து வாகனம் மூலம் சுமார் 20 தொன் திணிவுக்கும் மேலான பொருட்களை புவியுடனான ஒரு கீழ்நிலை ஒழுக்கு வரை எடுத்துச் செல்லவும் முடியும்...!

மேலதிக தகவல் - ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 2:12 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க