Tuesday, January 24, 2006

கருணைத் தற்கொலை..!




Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்ப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..!

குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்றன. இறுதியில் அவர் மரணப்படுக்கைக்கு செல்ல வேண்டியதாகிறது. இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

குறித்த நோயாளியுடனான பிபிசியின் இறுதிச் செவ்வி

மேலதிக தகவல் இங்கு

மேலும் ஒரு இணைப்பு

பதிந்தது <-குருவிகள்-> at 3:14 pm

1 மறுமொழிகள்:

Blogger kuruvikal விளம்பியவை...

இவ்வலைப்பூ வாசகர்களே இக் கருணை அடிப்படையிலான தற்கொலை அனுமதி பற்றி உங்கள் கருத்துக்களையும் இங்கு பகருங்கள்..!

நன்றி - குருவிகள்.

Wed Jan 25, 12:06:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க