Tuesday, September 12, 2006

வலுமிக்க புயற்சின்னங்கள் மனித உருவாக்கம் ?!



அமெரிக்காவை தாக்கிய Katrina என்று பெயரிடப்பட்ட புயற்சின்னத்தின் பாதிப்புக்கள்

சமீப ஆண்டுகளாக மனிதனின் இயற்கைச் சூழல் மீதான ஆதிக்கத்தின் விளைவால்..உலகின் சுற்றுச்சூழலில் பல மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. ஓசோன் படலச் சிதைவு..பூமி வெப்பமுறுதல்..கடற்தாரவரங்களின் அழிவு..உலகின் உயிரினப்பன்மைத்துவத்தை சீர்ழிக்கக் கூடிய வகையிலான உயிரினங்களின் முற்றான அழிவு..( இவை உணவுச்சங்கிலித் தொடர்பினூடு..பிற வாழும் இனங்களிலும் செல்வாக்குச் செலுத்தும்).. நச்சுப் பொருட்களின் வெளியேற்றமும் சூழலில் அவற்றின் தேக்கமும்..பனிப்பாறை உருகுதல் வேகம் அதிகரித்துள்ளமை..கடல்மட்ட உயர்வு..காபனீரொக்சைட்டின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பது..இயற்கை எரிபொருள் வளங்களின் வீழ்ச்சி..நன்னீருக்கான நெருக்கடி..மழை வீழ்ச்சிக் குறைவு..கடலுயிரின வளத்தின் வீழ்ச்சி..என்று பல சூழல் பிரச்சனைகள் இனங்காணப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது கடும் சேதங்களை விளைவிக்கக் கூடிய புயற்சின்னங்கள் தோன்றவும் மனிதனின் நடவடிக்கைகளே காரணம் என்று விஞ்ஞானிகளின் பகுப்பாய்வென்று எதிர்வு கூறியுள்ளது. புயற்சின்னங்கள் கடலில் தோன்றி தரையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து போகின்றன..! இந்தப் புயற்சின்னங்கள் வலிமை கூடியனவாக கரையை அடைகின்ற போது மனிதக் கட்டமைப்புக்களுக்கும்..இயற்கைக்கும் பேரழிவுகள் உண்டாகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் தற்போதெல்லாம் அடிக்கடி..வழமைக்கு மாறான எண்ணிக்கையில் புயற்சின்னங்களால் பாதிப்புக்கள் உண்டாகின்றன. அந்த வகையில் அவர்கள் தங்களின் தேவை கருதி மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து கடல் மேற்பரப்பில் வெப்பநிலை 2/3 என்ற அளவில் அதிகரித்திருப்பதுவும் வெப்ப நீரோட்டங்களின் போக்குமே தற்போதைய வலிமை மிக்க புயற்சின்னங்கள் தோன்றக் காரணம் என்றும்..இதற்கு மனிதனின் நடவடிக்கையால் வெளியேற்றப்படும் பச்சைவீட்டு வாயுக்களுக்கும்..அதன் போதான சூழல் வெப்ப அதிகரிப்புக்கும் முக்கிய பங்குள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது..!

உலகில் அதிகம் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா..சீனா..இந்தியா..பிரித்தானியா போன்றன முக்கிய இடம் வகிக்கின்றன.



புயற்சின்னங்கள் எப்படி உருவாகி வலுவடைகின்றன என்பதை விளக்கும் படம்.

கணணி வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட அசைவியக்க விபரணப்படம்
(அனிமேசன் - animated- விபரணம் - document) இங்கு அழுத்தி நோக்கவும்


இந்த ஒப்பீட்டியல் ரீதியான ஆய்வின் மேலதிக விபரங்கள்- கீழுள்ள இணைப்பில் காண்க.

பதிந்தது <-குருவிகள்-> at 11:07 am

1 மறுமொழிகள்:

Blogger kuruvikal விளம்பியவை...

வலைப்பூப் பதிவு வாசக நெஞ்சங்களே உங்களிடம் தெற்காசிய பிராந்திய சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய சமீபத்திய ஆய்வுக்கட்டுரைகள்..அல்லது ஆக்கங்கள் இருந்தால் இங்கு முன்வைத்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன் குருவிகள்.

Wed Sept 13, 03:39:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க