Wednesday, September 06, 2006

பிரபல 'Crocodile Hunter' Irwin மரணம்



அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin

டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..!

பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவியல் பண்புகளை வெளிக்காட்ட பல அருமையான காணொளி..வீடியோ..ஆவணப்படுத்தல்களை..மிகவும் அசாதாரணமான முறையில் அதிசயக்கத்தக்க வகையில் படப்பிடிப்புக்களை மேற்கொண்டு உருவாக்கித் தந்தவர்.

அந்த வகையில் பரந்த இனத்துவப்பன்மையைக் காண்பிக்கும் அவுஸ்திரேலிய இயற்கைச் சூழலில் உள்ள உயிரின வடிவங்கள் சிலவற்றினை மிக நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்கு திறம்பட வெளிக்கொணர்ந்தவர் இந்த சூழலியலாளர். இவரின் இழப்பு..இவரின் ஆவணங்களை டிஸ்கவரி சனல் மூலம் விரும்பி அவதானித்து வரும் பெரும் எண்ணிக்கையான இயற்கை வள நேச நெஞ்சங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் இழப்புக் குறித்து அவுஸ்திரேலிய இயற்கைப் பூங்கா என்று சொல்லத்தக்க கியுன்ஸ்லாண்டைச் சேர்ந்த..பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர்...!



பணியின் போது தன்னை தனது கடமைக்காக அர்ப்பணித்த எம்மால் ரசித்துப் பார்க்கப்பட்ட ஆவணங்களைத் தந்த இந்த சூழலியலாளனுக்கு எமது இரங்கல்கள்..!



முட்திருக்கை. இதன் வானில் உள்ள முள்..விசையோடு வாலைல் தாக்கும் போது மரணத்தை ஏற்படுத்தத்தக்க அளவுக்கு பாதிப்பை விளைவிக்கவல்லது.

மேலதிக தகவல் இங்கு

அவரின் நினைவாக..அவர் சம்பந்தப்பட்ட சில இணைப்புகளை இங்கு முன்வைக்கின்றோம்...

http://animal.discovery.com/fansites/crochunter/crochunter.html

http://www.sciam.com/article.cfm?articleID=0000462F-9484-1C75-9B81809EC588EF21

http://en.wikipedia.org/wiki/Steve_Irwin

காணொளி..வீடியோ..இங்கு பார்வையிடலாம்.

----------------------------

இவரின் இழப்பு அவுஸ்திரேலிய மக்களை மட்டுமன்றி உலகெங்கும் உள்ள இவரின் இரசிகர்களை துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இவ்வேளையில்..இவரின் இறுதி நேரப் படப்பிடிப்பும் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி..திருக்கையினை அண்மித்து படப்பிடிப்பில் கமரா உதவியாளருடன் நீந்திக் கொண்டிருக்கையில்..திருக்கையின் வால் மேலேழுந்து நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில்.. இதயத்தில்...குத்திய முள்ளை ஸ்ரீவ் இர்வின் தானே இழுத்தெடுத்து நீக்கிய அடுத்த நிமிடத்தியேலே அவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஸ்ரீவ் இர்வின் தேசிய மரியாதைகளுடன் கெளரவிக்கப்பட இருப்பதாக அவரனின் மரணச்சடங்குகள் தொடர்பில் வெளியிடப்பட்ட செய்திகள் கூறுகின்றன..!

இர்வினைத் தாக்கிய திருக்கை 1 மீற்றர் அகலமும் 100 கிலோகிராம் எடையும் கொண்டதாம்..! அதன் பயணப்பாதையின் முன்னே கமரா படப்பிடிப்பாளரும்..மேற்பகுதில் இர்வினும் இருந்த போதே திருக்கை பாதுகாப்புக்காக இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது..!

பதிந்தது <-குருவிகள்-> at 6:44 pm

2 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் விளம்பியவை...

உங்கள் பதிவுகளை அதிகம் பார்க்கமுடிவதில்லையே!!

Wed Sept 06, 09:53:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வணக்கம் சுந்தரவடிவேல்..! முதலில் உங்கள் வரவுக்கு நன்றிகள்.

எங்கள் புளக்கரில் ஏற்பட்ட தடைகள் மற்றும் நேரமின்மைகள் காரணமாக அதிகம் செய்திகள் பிரசுரிக்க முடியவில்லை. எம்மால் இயலும் போது செய்திகளை நிச்சயம் தருவோம். மீண்டும் நன்றிகளோடு..

நட்புடன் குருவிகள்

Wed Sept 06, 11:09:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க