Monday, October 22, 2007

மேற்குலக நாடுகளின் ஆபத்தான கழிவுகளுக்கு இந்தியா குப்பைக்கூடையா?



அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது.

காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு.

ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துவமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன்.

bbc.tamil

பதிந்தது <-குருவிகள்-> at 8:15 am

4 மறுமொழிகள்:

Blogger குசும்பன் விளம்பியவை...

ஆமாம் காலையில் இங்கு ரேடியோ செய்தியிலும் சொன்னார்கள், அதிர்ச்சியாக இருந்தது!

Mon Oct 22, 08:45:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு போனதும் தான் போச்சுது.. இந்தியா எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்குது போல..! :)

Mon Oct 22, 10:44:00 am BST  
Blogger ஜமாலன் விளம்பியவை...

நல்ல பதிவு... இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. இன்னும் படிக்க ஆர்வமூட்டும் பல தலைப்புகள் உள்ளன உங்களிடம். சேவைக்கு பராட்டுக்கள்.

//திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு போனதும் தான் போச்சுது.. இந்தியா எல்லாவற்றையும் திறந்து விட்டிருக்குது போல..! :)//

உண்மையான வாசகம்..

Mon Oct 22, 02:03:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி உங்கள் வரவுக்கு பாராட்டுக்கும்.

தொடர்ந்து வாங்க உங்கள் வளமான விமர்சனங்களையும் தாருங்கள். அப்போதுதான் எமது எழுத்தின் தரமும் உயரும் உங்களுக்கும் பெறப்படும் தகவலின் கனதியும் அதிகரிக்கும்.

நட்புடன் குருவிகள்.

Mon Oct 22, 03:02:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க