Friday, October 19, 2007

மரபணு மூலக்கூறைக் கண்டறிந்த Dr.Watson சிக்கலில்..!



Dr.Watson

மரபணு மூலக்கூறான டி என் ஏ (D.N.A)யின் வடிவத்தை கண்டறிந்த இரண்டு விஞ்ஞானிகளில் Dr.Watson என்ற அமெரிக்க விஞ்ஞானி, ஆபிரிக்கர்கள் ஐரோப்பியரை விட மதிநுட்பம் குறைந்தவர்கள் என்று வெளியிட்ட தகவலை அடுத்து சிக்கலில் மாட்டியுள்ளதுடன் ஆய்வுசாலைகளுக்குச் செல்லவும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

Dr.Watson இன் கூற்று விஞ்ஞானத்துக்குப் புறம்பானது என்றும் அது இனவாத அடிப்படையில் இருப்பதாகவும் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Dr.Watson, Dr. Crick என்ற பிரித்தானிய விஞ்ஞானியுடன் இணைந்து மரபணு மூலக்கூறான டி என் ஏ யைக் கண்டறிந்தார். அந்தக் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் 1962 இல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

அந்தக் கண்டுபிடிப்பே இன்று உயிரியல் தொழில்நுட்பத்தில் மரபணு தொழில்நுட்பம் துரித வளர்ச்சியடைய முக்கிய காரணமாகவும் அமைந்தது. உயிர்களின் இயல்புகள் பற்றி விளக்கம் பெறவும் மனிதனின் பரம்பரை அலகுகள் குறித்த அட்டவணையைத் தயாரிக்கவும் முன்னோடியாக விளங்கியது.

மேலதிக தகவல் இங்கு.



செயற்கையான முறையில் உயிர்க்கலங்களை தயாரிக்கும் திட்டம்.

இதனிடையே மரபணு தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி செயற்கை உயிரிகளை ஆய்வுசாலையில் தயாரித்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருக்கும் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 4:56 pm

2 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

தம்மை முற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு ஒரு சமூகம் இதிகாச ரீதியில் இந்தியருக்குள் ஏற்றத்தாழ்வு கற்பித்தது போல, இது விஞ்ஞான ரீதியான இழுக்கு.

அந்த விளங்காஞானிக்கு கண்டனங்கள் !

Sat Oct 20, 10:11:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் கண்டனமும் விஞ்ஞானி மேல வந்திருக்கு. ஆபிரிக்க உலகும் விஞ்ஞானத்துக்கான தன் பங்களிப்பைப் பற்றி தீவிரமா சிந்திக்கத் தலைப்பட வேணும் தானே. எத்தனை நாளைக்குத்தான் இருண்ட கண்டத்துக்க இருக்கப் போகினம் அந்த மக்கள். இப்படியான கூற்றுக்களாவது அவர்கள் தங்கள் திறமையை காட்ட முன் வர வைக்குதா என்று பார்ப்பேமே..!

நன்றி கோவிக் கண்ணன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

Sun Oct 21, 12:26:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க