Tuesday, October 16, 2007

செவ்வாய்க்கான நாசாவின் ரோவர்கள் சாதனையில்..!



நாசாவின் இரட்டை ரோவர்கள் செவ்வாயில் இருந்து அனுப்பிய படங்களில் கணணி மூலம் சீரமைக்கப்பட்ட படம்.

2004 வாக்கில் அமெரிக்க நாசா நிறுவனம் இரண்டு ரோவர்களை (தானியங்கி ரோபோக்களை) செவ்வாய்க்கு அனுப்பி வைத்தது. அவற்றிற்கு Spirit மற்றும் Opportunity என்று பெயரிட்டும் இருந்தனர். அவற்றின் ஆயுள் காலமாக 90 நாட்களே தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஆனால் இரண்டு ரோவர்களும் கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக பல இடர்களின் மத்தியிலும் இன்னும் செவ்வாய் பற்றிய ஆய்வில் சுற்றுச் சுழன்று ஓடி ஈடுபட்டு வருகின்றன.



Spirit Rover

Spirit ரோவர் அது செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து 7. 2 கிலோ மீற்றர்கள் ஓடி இருக்கிறது. செவ்வாய் பற்றி மொத்தம் 102,000 படங்களை அனுப்பி வைத்துள்ளது. இதன் இணையான Opportunity ரோவர் 11.6 கிலோ மீற்றர்கள் ஓடியுள்ளது. இது கிட்டத்தட்ட 94,000 படங்களை அனுப்பி வைத்துள்ளது.



Opportunity Rover

தற்போது மீண்டும் 5 தடவையாக இவை நாசாவால் வெற்றிகரமாக இயங்க வைக்கப்பட்டுள்ளன. பல இடர்களின் மத்தியிலும் (global dust storms போன்றவை) தொழில்நுட்பப் பிரச்சனைகளின் மத்தியிலும் நாசா விஞ்ஞானிகளின் அயராத முயற்சியினால் எதிர்பார்கப்பட்ட ஆயுள் காலத்தை விட பல மடங்கு அதிகமாக இந்த ரோவர்கள் செயற்பட செய்யப்பட்டுள்ளன என்பது வியப்புக்குரிய ஆனால் சாதனைக்குரிய விடயமாகவே விளங்குகிறது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:18 pm

5 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

அபரீதமான சாதனை தான்.

Wed Oct 17, 02:00:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி உங்கள் ஆர்வத்துக்கும், வரவுக்கும், பின்னூட்டலுக்கும்.

Wed Oct 17, 04:29:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தொடர்ந்து உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள்..

Wed Oct 17, 04:30:00 am BST  
Blogger ரவி விளம்பியவை...

படத்தின் தரம் ???>

Wed Oct 17, 07:02:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

ரவி இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்கள்.. நேரடியாக ரோவர் அனுப்பிய படங்களாக அன்றி அவற்றில் இருந்து பெறப்பட்ட கணணி மூலம் மறுசீரமைக்கப்பட்ட படங்களே.

குறித்த படத்தில் செவ்வாயின் சில தரைத்தோற்ற அம்சங்கள் அப்படிக் காட்சியளிக்கின்றன..!

Wed Oct 17, 07:22:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க