Wednesday, October 17, 2007

கடலடியில் புதிய உலகம்.



புதிய வகை கணவாய் இனம்.

மலேசியா,இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடைப்பட்ட பசிபிக் சமுத்திரப் பகுதியில் "coral triangle" (பவளப்பாறைகள் முக்கோணி) என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள Celebes Sea என்று அடையாளம் காணப்பட்ட இடத்தில் சுமார் 16,500 அடி ஆழமுள்ள சமுத்திரத்தின் அடியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதும், ஏனைய சமுத்திரப்பகுதிகளுடன் அதிக தொடர்பை காண்பிக்காததும், உயிரினப் பன்மைத்துவம் மிகுந்ததுமான ஒரு இடத்தை அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகள் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர்.



புதிய வகை விழுது மீன்.

சமுத்திரத்தின் இந்தப் பகுதியில் இருந்தே உயிரினங்கள் உருவாகி கூர்ப்படைந்து இதர பகுதிகளுக்கும் பரவி இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில், இதுவரை கடலுக்கடியில் 9100 அடிவரை தானியங்கி ஒளிப்படக் கருவிகளை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல நூறு புதிய இன உயிரினங்கள் இனங்காணப்பட்டுள்ளனவாம். இப்பகுதியில் தொடரும் ஆய்வில் இருந்து இன்னும் பல விடயங்களை அறிய முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Scientists discover rare marine species
By OLIVER TEVES, Associated Press Writer

MANILA, Philippines - Scientists exploring a deep ocean basin in search of species isolated for millions of years found marine life believed to be previously undiscovered, including a tentacled orange worm and an unusual black jellyfish.

Project leader Dr. Larry Madin said Tuesday that U.S. and Philippine scientists collected about 100 different specimens in a search in the Celebes Sea south of the Philippines.

Madin, of the Massachusetts-based Woods Hole Oceanographic Institution, said the sea is at the heart of the "coral triangle" bordered by the Philippines, Malaysia and Indonesia — a region recognized by scientists as having a high degree of biological diversity.

The deepest part of the Celebes Sea is 16,500 feet. The team was able to explore to a depth of about 9,100 feet using a remotely operated camera.

"This is probably the center where many of the species evolved and spread to other parts of the ocean, so it's going back to the source in many ways," Madin told a group of journalists, government officials, students and U.S. Ambassador Kristie Kenney and her staff.


நன்றி: Yahoo-AP news

பதிந்தது <-குருவிகள்-> at 5:02 am

6 மறுமொழிகள்:

Blogger சாணக்கியன் விளம்பியவை...

Is there any bridge in that area?

Wed Oct 17, 05:53:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பிரிஷ் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. ஆனால்... எதையும் சரியான எந்த ஆய்வும் செய்யாமல் சொல்ல மாட்டினம்.

நன்றி உங்கள் வரவுக்கும் வினவலுக்கும்.

I am able to understand ur seriousness but science cant allow to give brutal answer towards people according to fulfill someone's political stand. There is no matter whether they accept God or not.

Thanks for ur visit and made a comment.

Friendly
kuruvikal.

Wed Oct 17, 07:27:00 am BST  
Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

வான்வெளி எப்படியோ அப்படித்தான் கடலடி போலும்.நம் வாழ்நாளுக்குள் எதையுமே முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது போல் இருக்கு.
உங்கள் வலைப்பூ பின்புல வண்ணமும் எழுத்துரு வண்ணமும் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.மாற்றினால் நல்லது.இது எனக்கும் மட்டும் தானா? பிறருக்குமா? என்று தெரியவில்லை.கேட்டு தெளிவு பெறவும். நான் ஃபயர் பாக்ஸ் உபயோகிக்கிறேன்.

Wed Oct 17, 07:36:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி வடுவீர் குமார் உங்கள் கருத்துக்கும்.. வலைப்பூ மாற்றம் குறித்த உங்கள் அபிப்பிராயத்துக்கும்.

உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்படும்.

மீண்டும் நன்றிகள்.

Wed Oct 17, 12:32:00 pm BST  
Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

அப்பாடி,இப்போது பரவாயில்லை.
கருத்துக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி.

Thu Oct 18, 01:41:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வடுவூர்.. எமக்கு வாசகர்களாகிய நீங்களும்.. உங்களுக்கு வாசகர்களாகிய நாங்களும் தானே மாற்றங்களுக்கு வழிவகுக்கனும். அபிப்பிராயத்தைச் சொல்லவே பின்னிற்கிறவங்க மத்தியில.. உங்கள் மனசில தோன்றினதைச் சொன்னீங்க பாருங்க.. அங்க தான் நீங்க நிக்கிறீங்க நம்ம கில்லி ஸ்ரைலில..! :)

Thu Oct 18, 07:59:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க