Wednesday, December 31, 2008

தாவர எண்ணெயில் ஓடிய விமானம்.



சுவட்டு எரிபொருட்களான பெற்றோல் மண்ணெண்ணை என்பனவற்றின் பெறுதிகளைக் கொண்டு இயங்கி வந்த விமானங்கள் தற்போது எழுந்துள்ள வளிமண்டத்தில் அதிக காபனீரொக்சைட்டுச் சேர்க்கை மற்றும் பூமி வெப்பமுறுதல் விளைவுகளை அடுத்து தாவர எண்ணெயில் இயங்க ஆரம்பித்துள்ளன.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க வேர்ஜின் நிறுவனத்தின் விமானம் தாவர எண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்டு நீண்ட நேர பறப்பில் ஈடுபட்டு சாதனை் கண்டிருந்த நிலையில் 50% தாவர எண்ணெய்யையும் மிகுதி விமான எரிபொருளையும் கலந்து பெற்ற கலவையில் நியூசிலாந்து விமானிகள் நியூசிலாந்துச் சொந்தமான போயிங் 747 - 400 ரகத்தைச் சேர்ந்த பயணிகள் விமானத்தை 2 மணி நேரங்கள் பறப்பில் ஈடுபடுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

உண்மையில் இரண்டாம் தர தாவர எண்ணெய்யே இப்பறப்பின் போது பாவிக்கப்பட்டிருந்ததாகவும் அது பல்வேறு தாவர வகைகளில் இருந்தும் பெறக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வேர்ஜின் விமானம் தேங்காய் எண்ணெய் மற்றும் பிரேசில் babassu nuts இருந்து பெற்ற எண்ணெய்களின் கலவையில் இயங்கி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவலும் காணொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:04 pm

4 மறுமொழிகள்:

Blogger சதுக்க பூதம் விளம்பியவை...

http://tamilfuser.blogspot.com/2008/12/biofuel.html

Wed Dec 31, 10:29:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்களின் மேலதிக இணைப்புக்கு நன்றிகள் சதுக்க பூதம்.

குருவிகள்.

Wed Dec 31, 11:45:00 pm GMT  
Blogger Muruganandan M.K. விளம்பியவை...

நல்ல செய்தி.
ஆனால் இதனால் தாவர எண்ணெய் விலையும் விமானம்போல
ஆகாயத்தை எட்டாதிருந்தால் சரி.

Thu Jan 01, 11:07:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உண்மை தான் முருகானந்தன் ஐயா அவர்களே.

ஆனால் அருகி வரும் ஆபத்தான சுவட்டு எரிபொருள் வளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டுள்ள நிலையில் மீளக் கூடிய வளங்கள் சார் எரிபொருட்கள் கண்டறியப்படுதல் அவசியம் என்பதும் கட்டாயமாகி விட்டுள்ளது.

ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டால்.. அந்தத் தீர்வு தரும் பிரச்சனைக்கு இன்னொரு தீர்வைத் தேட வேண்டியதாகத்தானே மனித முயற்சிகள் இருக்கின்றன..!

நன்றி ஐயா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

குருவிகள்.

Thu Jan 01, 12:35:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க