Friday, December 05, 2008

உயர்மதிநுட்பம் உள்ள ஆண்கள் சிறப்பான வளமுள்ள விந்துகளை உருவாக்குகின்றனர்.



மதிநுட்பம் நிறைந்த ஆண்கள் சிறப்பான வளமுள்ள (விரைவாக நீந்திச் செல்லக் கூடிய) விந்துகளை உருவாக்குகின்றனர் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் முன்னைய வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்கப் படைவீரர்கள் உட்பட 425 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

இவ்விரண்டு இயல்புகளையும் (மதிநுட்பம் மற்றும் விந்தின் தரம்) தீர்மானிப்பதில் பொதுவான மரபணு அலகுகள் பங்கெடுக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னைய ஆய்வுகளில் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வாழ்க்கை முறைகளே இதனை அதிகம் தீர்மானிப்பதாகக் கருதியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில்.. மதிநுட்பம்,வயது மற்றும் வாழ்க்கை முறை என்பனவற்றுடன் மரபணு இயல்புகளும் ஆண்களில் விந்தின் இயல்பைத் தீர்மானிப்பனவையாக இருக்கின்றன.

அதுமட்டுமன்றி ஆண்கள் திடகாத்திரமாகவும் நல்ல உடலாரோக்கியமாகவும் இருப்பதைக் கூட மரபணு அலகுகள் தீர்மானிக்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர். இதுவும் முன்னைய கண்டுபிடிப்புகளில் இருந்து சற்று மாறுபட்டதாக அமைந்திருக்கிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:25 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க