Saturday, December 27, 2008

நெஞ்சு நோவா..?! அதை சாதாரணமாக எடுக்காதீர்கள்..!!



நெஞ்சு நோ அல்லது நெஞ்சு வலி (Chest pain or angina) தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு அடிக்கடி ஏற்படுகிறதா நிச்சயம் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டியவர் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு.

பல நெஞ்சு நோக்கள் இதய நோய்க்கான அறிகுறிகள் என்று குறிப்பிடும் மேற்படி ஆய்வு புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தோடு வாழ்பவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் இவ்வாறான நெஞ்சு நோக்கள் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

எனவே நெஞ்சு நோ என்றால் சாதாரணம் என்று எண்ணிடலாகாது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்ப அல்லது உறவுகள் அல்லது தொழில் பிரச்சனைகளால் அல்லது பலவேறு காரணங்களால் மன அழுத்தங்களோடு வாழ்பவர்கள் இதில் அதிக கவனமெடுக்க வேண்டும்..!

நெஞ்சு நோ இருப்பின் உடனடி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது நன்று.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க