Wednesday, December 10, 2008

எமது அகிலத்தொகுதிக்கான கருந்துவாரம் கண்டுபிடிப்பு.



எமது பூமி உட்பட்ட கோள்களும் பல நட்சத்திரங்களும் அடங்கும் எமது அகிலத் தொகுதி ( galaxy) க்குரிய கருந்துவாரம் (Black hole - கருந்துளை) ஜேர்மனிய வானியலாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கருந்துவாரம் பூமியில் இருந்து 27,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது.

சூரியனைப் போல 4 மில்லியன் மடங்கு அதிக திணிவுடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த கருந்துவாரப் பகுதியை அண்டி 28 நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றனவாம்.

கருந்துவாரத்தின் ஈர்ப்பு சக்தி ஒளியைக் கூட தப்பிச் செல்லவிடாது கவர்ந்திழுக்கக் கூடிய சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள the European Southern Observatory இனைப் பாவித்து 16 ஆண்டுகளாக செய்யப்பட்ட விண்ணியல் ஆய்வில் இருந்து இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



எமது அகிலத் தொகுதியில் சூரியனின் ஸ்தானம். (படத்தில் அழுத்தி பெரிதாக்கி நோக்கவும்)

மேலும் படங்கள் இங்கு.

அகிலத் தொகுதி படங்கள்.

கருந்துவாரத்தில் இருந்தே நட்சத்திரங்கள் மற்றும் திணிவுகள் பிறப்பெடுப்பதாக நம்பப்பட்டு வருகிறது.

பேரண்டத்தில் (universe) பல ஆயிரக்கணக்கான அகிலத் தொகுதிகள் (galaxy) உள்ளன. அவற்றில் ஒன்றில் எங்கோ ஒரு மூலையில் தான் எமது பூமி இருக்கிறது..!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:09 am

3 மறுமொழிகள்:

Blogger தேவன் மாயம் விளம்பியவை...

கருந்துளை, விஸ்வம்
போன்ற செய்திகள்!
வருக!!! நிறய தருக!!!
தேவா.

Wed Dec 10, 09:06:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி தேவா.

தொடர்ந்து வரும்.. விஞ்ஞானக் குருவி சுமத்து வரும்..! படியுங்கள்.. ஊக்கம் நல்குங்கள்.

Wed Dec 10, 09:19:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

நண்பரே இந்த பேருவெடிப்புச் சித்தாந்தத்தை அபிராமி அந்தாதி எப்படி அழகாகச் சொல்கிறது என்று பாருங்கள்

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும் ஒளியே
ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன்
அறிவின் அளவிர்களவானது அதிசயமே

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து உலகெங்குமாய் நின்றாய் அனைத்தையும் நீங்கி நிற்பாய்

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே

Thu Dec 11, 02:05:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க