Friday, December 05, 2008

கடவுளின் துகள் தேடிப் பரிசோதனை உபகரணம் விபத்தால் சேதம்.



இவ்வாண்டின் இறுதிக்காலாண்டின் முற்பகுதியில் இரண்டு புரோத்தன் கற்றைகளை தனித்தனியே எதிர் எதிர் திசைகளில் அதி உயர்வேகத்தில் வலம் மற்றும் இடஞ்சுழியாக சுழற்றி வெற்றி காணப்பட்டதாகச் சொல்லப்பட்ட பேரண்டப் பெருவெடிப்புக்கு சற்றுப் பின்னான சூழலை உருவாக்கும் அல்லது கடவுளித் துகள் தேடும் பரிசோதனையின் போது அங்கு கையாளப்பட்ட Large Hadron Collider (LHC)இல் கீலியம் வாயுக் கசிவினால் சுமார் 14 மில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவு செய்ய வேண்டிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சேதத்திற்கான காரணம்.. மற்றும் அதை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் இவ்வாறான கடும் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு விபத்துக்கள் தொடர்பில் முன்கூட்டி எச்சரிக்கை வழங்கும் சாதனங்கள் பரிசோதனை உபகரணங்களோடு பொருத்த வேண்டிய அவசியத்தை பரிந்துரைத்துள்ளனர்.

சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 27 கிலோமீற்றர்கள் வட்டப் பரிதியுடைய Large Hadron Collider பல நூறு மின்காந்தங்களையும் அவற்றைக் குளிர்விக்க என்று கீலியத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலவே இப்பரிசோதனையின் வாயிலாக பூமி அழிந்துவிடக் கூடும் என்று ஒரு சாரார் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட விபத்தால் இங்கு மேற்கொள்ளப்பட இருந்த பரிசோதனைகள் 2009 நடுப்பகுதி வரை பிற்போடப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:23 am

2 மறுமொழிகள்:

Blogger சிக்கிமுக்கி விளம்பியவை...

தமிழ் ஊடகங்கள் எதுவும் தராத செய்தியைத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

Fri Dec 05, 04:57:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள் சிக்கிமுக்கி.

Fri Dec 05, 11:23:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க