Thursday, December 04, 2008

விண்வெளியில் தொலைந்த ஒரு பொருள்..!



சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார்.

சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது.

அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பூமியின் குறிப்பிட்ட சில பாகங்களில் இருந்து தெளிவான இரவு வானில் அந்தப் பை விண்வெளியில் மிதந்து செல்வதை தொலைநோக்கிகள் கொண்டு காண முடிகிறதாம்.

ம்ம்.. பூமிப் பெண்கள் பூமியிலதான் கைக்குட்டை, கைப்பை என்று அடிக்கடி தவறவிடுகிறார்கள் என்றால்.. விண்வெளிக்கும் போயுமா..??!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க