Thursday, January 01, 2009

தாவரங்களை காப்போம்.. பெருக்குவோம் - புத்தாண்டு உறுதிமொழி



நாம் மனிதர்கள் வாழத்தக்க சூழலை இப் பூமிப்பந்தில் ஏற்படுத்தித் தந்தது கடவுளா என்றால் இல்லை தாவரங்களே என்றுதான் ஒரு அறிவியலாளன் பதிலளிப்பான்.

காரணம் நாம் உயிர் வாழ சுவாசிக்கும் ஒக்சிசன் வாயுவை உற்பத்தி செய்வதும் தாவரங்கள் தான், நாம் கழிவாக வெளியிடும் காபனீரொக்சைட்டை தாம் உள்ளெடுத்து உணவாக்கித் தந்து காற்றை சுத்தப்படுத்துவதும் தாவரங்கள் தான்.

அதுமட்டுமல்ல.. மனிதருக்கு தேவையான மருந்துகள் உட்பட பல முக்கியமான பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுபவையும் தாவரங்கள் தான். மேலும் தற்போது வாகனங்கள் மற்றும் விமானங்களுக்கு அவசியமான எரிபொருட்களை பெறவும் தாவரங்கள் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏன் இன்றைய சூழல் வெப்பமுறுதலுக்கு, சூழல் மாற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக இருப்பவற்றில் ஒன்றாக தாவரங்கள் மனிதர்களின் நடவடிக்கைகளால் பூமிப்பந்தில் இழக்கப்படுவது இருக்கிறது.

அதுமட்டுமன்றி சூழல் பாதிப்படைவதால் விலங்கு உயிரினங்கள் மட்டுமன்றி பல அரிய வகை தாவர இனங்களும் பூமிப்பந்தில் அழிந்து போய்விட்டன. பல வகை தாவர இனங்கள் அருகி வரும் இனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு.. இன்றைய புத்தாண்டு தினத்தில் உலக மக்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய வேண்டுகோள் என்ன என்றால் பூமிப் பந்தில் என்றுமில்லாதவாறு தாவரங்களின் இருப்பும் பெருக்கமும் அவசியமாகி உள்ளது என்பதும் அது நடந்தால் தான் மனிதன் இப்பூமியில் இன்னும் நீடித்த காலத்துக்கு வாழ முடியும் என்பதுமாகும்..!

ஆகவே இவ்வாண்டில் இருந்து மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் ஏன் பூமிப்பந்தின் இயக்கத்துக்கும் உதவும் தாவரங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் நாம் ஒவ்வொரும் உறுதிமொழி எடுத்துச் செயற்படுவோமாக.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க