Tuesday, April 07, 2009

பெண்களுக்கு நல்லா மணக்க வருமாம்.



பெண்களுக்கு ஆண்களை விட அதிகம் உடல் மணத்தை நுகரும் ஆற்றல் இருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் உடல் மணத்தைக் கொண்டும் பெண்கள் தமக்கு தகந்த துணையை தேடிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் எங்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெண்கள் ஆண்களின் குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வரும் உடல் மணத்தை கொண்டு அவர்களை இலகுவாக ஆண்கள் என்று இனங்கண்டு விடுகின்றனராம். ஆனால் ஆண்களால் அப்படி இனங் காண்பது கடினமாக உள்ளதாம்.

இருப்பினும் ஆண்கள் அக்குள் நாற்றத்தை கட்டுப்படுத்துவது பெண்களினதை விடக் கடினமானதாக உள்ளதாம். 19% மான வாசனைத் திரவியங்கள் ஆண்களின் உடல் மணத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்ற வேளையில் 50% மானவை பெண்களின் உடல் நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றனவாம்.

(அதுதான் பெண்களுக்கு என்று அதிக வாசனைத் திரவியங்களை தயாரிக்க முடிகிறதோ..!)

பெண்கள் தமக்கான துணையை தெரிவு செய்வதில் ஆண்களை விட அதிகம் கவனம் செலுத்துவதாகவும் அதிலும் தமது பிறப்புரிமை இயல்பை ஒத்த துணையை விட வேறுபட்ட பிறப்புரிமை இயல்புடைய துணையை தெரிவு செய்வதில் அவர்கள் கூர்ப்பின் வழி முன்னேறி வருவதாகவும் இனங்கண்டுள்ளனர்.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:53 am

1 மறுமொழிகள்:

Blogger ஆ.ஞானசேகரன் விளம்பியவை...

நல்ல பகிர்வு

Tue Apr 07, 12:58:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க