Saturday, February 04, 2012

4 வது பூமி கண்டுபிடிப்பு..!

விண்வெளியில் எமது பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் உண்டா என்ற தேடலின் விளைவாக இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் இறுதியாக இணைந்திருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள GJ 667C என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் (GJ 667Cc) ஒன்று.

இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன்.. 4.5 மடங்கு அதிக அளவு திணிவையும் கொண்டிருப்பதுடன் 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றியும் வந்துவிடுகிறதாம்..! இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதற்கிடையே நாசாவின் விண்ணியல் தொலைநோக்கியான கபிள் அகிலம் (Gallaxy) ஒன்றின் பிரமிக்கத்தக்க படம் ஒன்றை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

Astronomers say they've discovered a fourth planet outside our solar system that could support life.
It orbits a star called GJ 667C, about 22 light years away from Earth.

The star is less hot than our sun but the planet - called GJ 667Cc - is close enough that its surface temperature should be about the same as Earth's.

The planet's much bigger than Earth - about 4.5 times our planet's mass - but it orbits its star about every 28 days, so its year is about one Earth-month. - (bbc.co.uk)

மேலும் செய்திகள்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க