Wednesday, February 29, 2012

5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Oetzi மனிதனின் பாரம்பரியம் வெளிப்பட்டது.

இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட  5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi இன் முழு ஜினோம் (Whole-genome) (பாரம்பரிய வடிவம்) பற்றி அதன் டி என் ஏ பகுப்பாய்வு மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் Oetzi கபில நிறக் கண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும்.. "ஓ" வகை குருதியை கொண்டிருக்க வேண்டும் என்றும்.. பால் வெல்லமான லக்ரோஸ்  சமிபாட்டுப் பிரச்சனையை (lactose intolerance) கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் பல பாரம்பரியம் சார் விடயங்களை ஜினோம் பகுப்பாய்வில் இருந்து வெளிக்கொணர்ந்துள்ளனர்.


நவீன மனிதனின் நெருங்கிய மூதாதையர் ஒன்றின் முழு ஜினோம் பற்றிய தகவல் படிக்கப்பட்டுக் கொண்டிருப்பது உலகில் இதுவே முதற் தடவை ஆகும். இந்த Oetzi கூரிய ஆயுதம் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதோடு புதிய வகை பக்ரீரியா (Lyme disease bacterium) தாக்கம்.. இதய நோய் சம்பந்தப்பட்ட குணங்குறிகளும் இதில் அவதானிக்கப்பட்டுள்ளன.

Oetzi மத்திய கிழக்கில் இருந்து விவசாயத்திற்காக இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

 Oetzi  பற்றிய இந்த ஜினோம்  ஆய்வு ஒரு ஆரம்பக் கட்ட வடிவில் உள்ளதாகவும் இன்னும் அது முழுமை பெறுகின்ற போது பல விடயங்களை நவீன மனிதன் படித்துக் கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:00 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க