Tuesday, February 28, 2012

நித்திரை மாத்திரைகள் விரைந்து மரணத்தை வரவழைக்கின்றன.

நித்திரை இன்மை என்பது மக்களைப் பொறுத்த வரை அதுவும் மன அழுத்தங்கள் நிறைந்த இன்றைய உலகியல் மனித வாழ்வியல் முறையில் பொதுவான பிரச்சனை.

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள பலர் நித்திரை மாத்திரைகளை சாப்பிட்டு நித்திரையை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அவையோ இவர்களின் ஆயுளை சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டிருப்பது ஆராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் 33,000 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மருந்துகளால் ஏற்படும் ஆபத்துக் குறித்த எச்சரிக்கையை நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதே அன்றி முற்றாக மாத்திரியை எடுப்பதை நிறுத்தப் பரிந்துரைக்கவில்லை இந்த ஆய்வுக் குழு.

இந்த ஆய்வு பல்வேறுபட்ட நித்திரை மாத்திரைகளின் மீதும் நடத்தப்பட்டுள்ளது. அவையாவன benzodiazepines (temazepam and diazepam), non-benzodiazepines (zolpidem, zopiclone and zaleplon), barbiturates மற்றும் sedative antihistamines.

மேலும் அதிகளவு நித்திரை மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மத்தியில் புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த ஆய்வு குறித்து மக்கள் பயம் கொள்ளத் தேவை இல்லை என்றும் இந்த ஆய்வு வேறு மாதிரிகளைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு முடிவுகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதுவரை மக்கள் இவற்றைப் பாவிப்பதில் இருந்து பயப்படத் தேவையில்லை என்கிறார் லண்டன் கிங்க்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ஒருவர்.

இந்த மருந்துகள் நேரடியாக மக்களைக் கொல்லாத போதும்.. மக்களுக்கு இந்த மருந்துகளின் பாவனையின் பின்னால் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கையாவது வழங்குவது அவசியமே..!

மேலும் தகவல்கள் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:33 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க