Thursday, March 08, 2012

மிக வலுவான சூரியப் புயல் பூமியை தாக்கப் போகிறது.

சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது.



அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும்.

இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

தற்போது சூரியனில் இருந்து கிளம்பி இருக்கு இந்த மின்காந்தப் புயல் கடந்த 5 ஆண்டுகளில் பெரியது என்பதுடன் வலுவானதாக இருக்கிறதாம்.

அந்தப் புயல் பூமியை 08-03-2012 முதல் 10-03-2012 வரையான காலப்பகுதி வரை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:08 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க