Sunday, May 06, 2012

சுப்பர் மூன். (பெரிய சந்திரன்)

Posted Image

மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம்.

இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இருக்கக் கூடும்.

சந்திரனின் இந்த நிலை காரணமாக பாரதூரமான இயற்கை அனர்த்தங்களுக்கு இடமில்லை என்று கூறும் அறிவியலாளர்கள்..மனிதர்களுக்கோ இயற்கைக்கோ.. எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

எதுஎப்படி இருப்பினும்... வானியல் அவதானிப்பாளர்களுக்கோ.. சந்திரனை நெருங்கிய தூரத்தில் கண்டு களிக்கும் குசி மட்டும் மிஞ்சி இருக்கிறது.

  மேலும் ஆதாரங்களும்.. காணொளியும் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:07 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க