Friday, April 27, 2012

புறாவின் மூளையில் "GPS" கண்டுபிடிப்பு.

Posted Image

அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள்.

பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.

அந்தப் புறாவும் திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.


சரி..உந்த காதல் புராணத்தை விட்டு.. இப்ப விசயத்துக்கு வருவம்..! விசயம் என்னென்னா.. எப்படி இந்தப் புறாக்கள் திசைமாறாமல் பறந்து சென்று சேர வேண்டிய இடத்தைச் சேர்கின்றன. புறாக்கள் மட்டுமல்ல.. பறவைகள் எல்லாமே எப்படி திசை மாறாமல் இலக்கு நோக்கிப் பறக்கின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதற்கு பல்வேறு கொள்கை விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில்..


Posted Image


இப்போது அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒரு விடை கிடைக்கிற மாதிரி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் புறாவின் மூளையில் 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேட தொகுதி ஒன்று.. இனங்காணப்பட்டிருப்பது. அந்த நரம்புக்கலங்கள் (GPS neurons)
பூமியின் காந்தப் புலச் செறிவுக்கு ஏற்ப தூண்டப்பட.. அந்த வழி திசையறிந்து பறக்கின்றனவாம் புறாக்கள்..!

அதெப்படி.. காந்தப்புலத்தை.. குறிப்பிட்ட கலங்கள் கண்டறிகின்றன என்ற விடயம் இன்னும் பூரணமாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும்... இவ்வளவையும் கண்டறிந்த ஆய்வாளர்கள் அதைச் செய்யாமலா இருப்பார்கள். எனவே புறாக் கூட அதன் மூளையில் உள்ள.. இயற்கையான GPS ஐ வைச்சுத்தான் திசை அறிந்து பறக்கிறது என்ற உண்மை உறுதியாக வெளிவர அதிக நாள் எடுக்காது என்று நம்பலாம்.


இது இன்னொரு விசயத்தையும் விளங்கிக் கொள்ள உதவும். குறிப்பாக செறிவான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில்.. வாழ்ந்து வந்த பறவையினங்கள் பல அருகி விட்டுள்ளதுடன் இன்னும் சில இடம்பெயர்ந்தும் சென்றுவிட்டன. பறவைகளின் இந்த நடவடிக்கைக்கும்.. இதன் மூலம் சரியான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது..!


Magnetic fields light up 'GPS neurons', scientists say


வெளி இணைப்பு- நன்றி BBC

தொகுப்பு: யாழில் நெடுக்ஸ்

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:40 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க