Sunday, February 17, 2013

இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்: அழிந்து வரும் ஓர் அடையாளம் : இந்த நிலை நாளை தமிழர்க்கு..?!

இலங்கையில் மிகக் குறைந்த அளவில் வாழ்ந்து வரும் கஃபீர் சமூகத்தில் ஆண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


தனது பேத்தியுடன் கொஞ்சும் கஃபீன் இனப் பெண்மணி ஒருவர்
இம்மக்கள் பிறப்பால் இலங்கையர்களாகவும் உதிரத்தால் ஆப்பிரிக்கர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

இலங்கையில் மற்ற சமூகங்களின் ஆண் பெண் விகிதாச்சாரத்தை ஒப்பிடும் போது, கஃபீர் இனத்தில் அந்த ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகமாக உள்ளது. அவர்களிடையே பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் மிகவும் குறைவாகவும் உள்ளனர்.

தமது சமூகத்தில் ஏன் ஆடவர்கள் குறைவாக உள்ளார்கள் என்பதை அம்மக்களால் குறிப்பிட்டு துல்லியமாக சொல்ல முடியாமல் உள்ளது.



தனது விளையாட்டுத் தோழர்களுடன் சஜித்.

ஆனால், தமது இனத்து ஆடவர் மற்றும் பெண்கள் தொடர்ச்சியாக தமிழ், சிங்கள மற்றும் பறங்கியர் ஆகியோரிடையே திருமணம் செய்து வந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இலங்கை வாழ் கஃபீர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கோவிலகே லவுண்டி கிறிஸ்ட்டி கூறுகிறார்.

தலைமுறைகளைக் கடந்த ஒரு பிரச்சினையாக இது இருந்தாலும், இதற்கான தீர்வு என்ன என்பதை யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த இன மக்களே இலங்கையில் இல்லாமல் போகும் ஒரு அபாயம் உள்ளது என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

நன்றி பிபிசி தமிழ்

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:28 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க