Thursday, October 10, 2013

செக்ஸ் வைச்சே செத்துப் போகும் மாசூப்பியல்.


_70346014_c0137927-yellow-footed_antechi

மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள்  14 மணி நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில் செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல் பொறிமுறை மூலம் உடலுறவுக்கான ஆசை அடங்குவது இந்த விலங்குகளில் இல்லை என்பதால்.. ஆண் ஓமோனின் செக்ஸ் தூண்டலின்.. தொடர் செயற்பாட்டால்.. தொடர்ந்து செக்ஸ் வைச்சே இறுதியில் செத்துப் போகின்றனவாம்... இந்த வகை விலங்குகள்.

பெண் பல ஆண்களோடு ஒரே இனப்பெருக்கக் காலத்தில் உறவு வைத்துக் கொள்வதன் மூலம்.. பலவீனமான ஆணின் விந்து தனது முட்டையோடு கருக்கட்டுவதை தடுத்து வளமான ஆணின் விந்து கருக்கட்டி வளமான.. தப்பிப்பிழைக்கக் கூடிய குட்டிகளை உருவாக்குகிறதாம்.

உடலுறவின் பின் ஆண் சிலந்திகளை பெண் சிலந்திகள் கொன்றுவிடும் வழமை சில சிலந்தி இனங்களிலும்  உள்ளன.

இப்போது.. இந்த தற்கொலை செக்ஸ் என்பது சில தாவர இனங்கள் உட்பட மாசூப்பியல் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமாக இல்லை..??!

Sex is matter of life, then death for male marsupials.

A new study suggests that some species of marsupials mate with such vigour and intensity that it quite literally kills them.

The scientists say that males die in large numbers after mating with as many partners as possible in sex sessions lasting up to 14 hours at a time.

A key factor in this costly coitus is the promiscuous behaviour of females who all breed at the same time of year.

 மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:05 pm

2 மறுமொழிகள்:

Blogger Massy spl France. விளம்பியவை...

மாசூப்பியல் என்பதை மார்சூப்பியால் என உச்சரிப்பது சரி என சொல்லலாம் . உண்மையில் இந்த பெயரின் பூர்வீகம் நம் தமிழ்தான். இந்த மார்சூப்பிகள் குட்டிகள் ஈன்றெடுத்ததும் புதிதாக பிறந்த புழுக்களை போன்ற உருவமுடைய இவைகள் தங்களது தாயின் மடியில் புகுந்து மார்களை சப்பியபடி வளர்ந்து உரு பெரும். இதனால்தான் இதை மார் சப்பிகள் அல்லது மார்சூப்பியால் என அழைக்கப்படுகிறது.

Thu Oct 10, 08:29:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உண்மையைச் சொன்னால்.. இந்தப் பதிவுக்கான தலைப்பை நீங்கள் குறிப்பிட்ட படிதான் இட்டிருந்தோம். ஆனாலும்.. அறிவியலில் நாங்கள் தன்னிச்சையாக எதனையும் முடிவுசெய்யக் கூடாது ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆங்கிலத்தையே தமிழில் உச்சரிக்க முடிவு செய்திருந்தோம். இருந்தாலும் உங்கள் கருத்து எங்களின் எண்ணத்தோடு அப்படியே ஒத்துப்போகிறது. நன்றி மாசிலா தங்கள் வரவிற்கும் பதிவிற்கும். :)

Fri Oct 11, 08:32:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க