Wednesday, April 15, 2009

செக்ஸ் வேண்டாம் எறும்புகள்.



அமேசன் பகுதியில் வாழும் ஒரு இன (Mycocepurus smithii) எறும்புகள் "செக்ஸ்" மூல இனப் பெருக்கத்தை முற்றாக கைவிட்டு இயற்கையான குளோனிங் முறை மூலம் எப்போதும் ராணி எறும்பில் இருந்து பெண் எறும்புகளையே உருவாக்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரினக் கூர்ப்பில் இது அசாதாரணமாக விளங்குவதாக இருப்பினும் "செக்ஸ்" இன்றிய இனப்பெருக்கத்தில் நன்மைகளோடு தீமைகளும் அமைகின்றன என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.

எறும்புகள் அல்லது பூச்சிகளைப் பொறுத்தவரை புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் மூலம் முட்டையில் இருந்து ஆண்களை உருவாக்குதல் பொதுவான நிகழ்வாக இருப்பினும் பெண்களை உருவாக்குதல் மிக அரிதாகும்.

இவ்வாறு புணர்ச்சித் தகவற்ற இனப்பெருக்கம் எறும்புகளைப் பொறுத்தவரை வலுவான ஆண்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவையை இல்லாமல் செய்வதோடு பெண் எறும்புகளின் இனப்பெருக்க உறுப்புக்களும் முக்கியத்துவமற்ற நிலையில் பலவீனமானவையாக அமைகின்றன. அதுமட்டுமன்றி குடித்தொகையில் 100% பெண் எறும்புகளை உருவாக்க இம்முறை உதவுகிறது. ஆனாலும் பிறப்புரிமையியல் ரீதியில் எல்லா பெண் எறும்புகளும் ஒத்த இயல்பைக் கொண்டிருக்கும் தன்மை இருப்பதால் இவற்றால் ஒட்டுண்ணிகள், நோய்கள் மற்றும் சூழல் மாற்றங்களை எதிர்த்துப் போராடுவது என்பது சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த எறும்புகள் மனிதர்களைப் போல தமது உணவுத் தேவைக்காக பயிர் செய்கையில் ஈடுபடுகின்றன. இவை தமது தேவைக்காக பங்கசுகளை உணவூட்டி வளர்க்கும் அற்புதத்தையும் ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல 80 மில்லியன் ஆண்டுகளாக இருக்குமாம் எங்கின்றனர்.

Bachelor ரா இருந்திட்டா பிரச்சனையே இல்லை என்று மனிதனே நினைக்கிற இக் காலத்தில எறும்புகள் உதாரணமாக..! சூழல் மட்டுமல்ல உயிரின வாழ்க்கை முறைகளும் மாறிக்கிட்டுத்தான் இருக்கின்றன என்பதை சொல்கின்றன இந்த எறும்புகள்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:02 am

4 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

//அமேசன் பகுதியில் வாழும் ஒரு இன (Mycocepurus smithii) எறும்புகள் "செக்ஸ்" மூல இனப் பெருக்கத்தை முற்றாக கைவிட்டு இயற்கையான குளோனிங் முறை மூலம் எப்போதும் ராணி எறும்பில் இருந்து பெண் எறும்புகளேயே உருவாக்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
//


ஆகா குளோனிங் முறை இறைவன் படைப்பிலும் நடைமுறையில் இருக்கிறது, அதுவே முன்னோடி என்று மதவாதிகள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்

:)

Wed Apr 15, 08:35:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

சில வகை குளோனிங் (cloning)இயற்கையில் நடைமுறையில் இருப்பினும் மரபணு மாற்ற தொழில்நுட்பம் (Genetic engineering) மனிதன் உருவாக்கியது.

மதவாதிகள் எதைத்தான் விட்டு வைத்தார்கள்.. அவங்க ரச் பண்ணாத சப்ஜெக்ட் இருக்கா என்ன..! -:))

நன்றிகள் கோவி.கண்ணன்.

Wed Apr 15, 09:00:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

நமக்குத்தா ஆயிரம் பிரச்சனையுன்னா எறும்புக்குமா..?! ஏன் கலியாணமே வேணாங்குது. -:))

Wed Apr 15, 10:33:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பெண் எறும்புகள் நலிவானவையாம். அதனால் அவற்றுக்கு ஆண்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கலியாணமே வேணாண்டிட்டுதுகளாக்கும்.

//when they dissected the female insects, they found them to be physically incapable of mating, as an essential part of their reproductive system known as the "mussel organ" had degenerated.//

Wed Apr 15, 10:38:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க