Thursday, March 31, 2005

பூமி அதிர்ச்சி வந்தும் வராத சுனாமி...!



முன்னைய தற்போதைய பூகம்ப மையங்களும் அவை ஏற்பட்ட இடங்களில் பூமித்தட்டுக்களின் நிலையும்...!

மார்கழித் திங்கள் 26ம் நாள் இந்து சமுத்திரத்தில் ஒரு டசின் நாடுகளைத் தாக்கி பேரழிவுகளைத் தந்த சுனாமியைத் தந்த 9.3 ரிக்ரர் அளவுடைய இந்தோனிசிய சுமாத்திராத் தீவுக்கருகில் மையம் கொண்டெழுந்த பூகம்பத்தோடு ஒப்பிடும் போது கடந்த 28ம் திகதி எழுந்த பூகம்பம் 12 - 15 மடங்கு சக்தி குறைவானதாகவும் அதன் உற்பத்தி மையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒப்பீட்டளவில் ஆழம் கூடியதாக இருந்ததாலும் பாரிய பூமித்தட்டுக்கள் ஒன்றுக்கு ஒன்று கீழ் செருகலுக்கு உட்பட்டு பாரிய அளவு கடல்நீர் இடப்பெயர்ச்சிக்கு இடமளிக்காததாலும் சுனாமி உருவாவது தடுக்கப்பட்டுள்ளது...!

அநேகமாக பூமி அதிர்ச்சிகள் ஒப்பீட்டளவில் சிறிய பூமித்தட்டுக்கள் பலவீனமாக மேற்பொருந்தும் அல்லது செருகி இருக்கும் இடங்களில் தான் நேரும்... ஆனால் மார்கழித்திங்கள் பூமி அதிர்ச்சி பாரிய இந்திய பூமித்தகடு யுரேசியன் (பர்மா மைக்குறோ ) தகடு நோக்கி கீழ்முகப் பெயர்ச்சியைக் காண்பிக்கும் வகையில் அசையத்தக்கதாக மையம் கொண்டு சக்தியும் கூடியதாகவும் இருந்ததால் பாரிய அளவு கடல்நீர் இடப்பெயர்ச்சிக்கு வழி வகுத்து சுனாமியைத் தோற்றிவித்தது...!

ஆனால் கடந்த 28ம் திகதி பூகம்பம் அப்படியன்றி.. அது மையம் கொண்டிருந்த இடத்தில் பலவீனத்தட்டுகளில் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான அசைவுகளை ஏற்படுத்தியதாலும் அது பாரிய அளவு கடல்நீர் பெயர்ச்சிக்கு வழி வகுக்காத படியாலும் சுனாமி உருவாகாமல் சிறிய அளவிலான் கடல் கொந்தளிப்புடன்... (0.5 மீற்றர் வீச்சமுடைய அலைகள் மட்டுமே உருவாகியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன... ஆனால் மார்கழித்திங்கள் சுனாமியின் போது 10 மீற்றர்கள் வீச்சமுள்ள அலைகள் கரையை எட்டியிருந்தன..!)... அந்தப் பூகம்பத்தின் விளைவு அடங்கிவிட்டது...! இருப்பினும் பூமி அதிர்ச்சியின் போது வெளியிடப்பட்ட சக்தியின் நேரடித்தாக்கத்துக்கு இலக்காகி அதிர்வைக் கண்ட Sunda trench fault சார்ந்த பகுதியில் அழிவுகள் நேர்ந்துள்ளன...!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க