Friday, January 21, 2005

மெதேன் மழை பொழியும் ரைரன்..!



Huygens probe ரைரனில் தரையிறங்குவது போன்ற காட்சி...!



ரைரனில் திண்மத் தரை மற்றும் திரவப் பரப்புக்கள் சந்திக்கும் இடம்...!

சனிக்கிரகத்தின் பெரிய உபகோளான ரைரனில் திரவ மெதேன் (CH4) மழை பொழிவதாகவும் அவையே பூமியில் நீரோடைகள் குளங்கள் இருப்பது போன்ற தரைத்தோற்றத்தை ரைரனில் உருவாக்கியுள்ளதாகவும் பூமியில் நிகழ்வது போல தரை அரிப்புப் போன்ற செயற்பாடுகள் அங்கும் நடைபெறுவதாகவும் Huygens probe அனுப்பிய தகவல்களை மேலும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....!

அவர்கள் இவை குறித்து மேலும் விபரிக்கையில் மெதேன் ஆறுகள் பனிக்கட்டி மலைகள் மீது ஓடும் அதேவேளை ஆவிபறப்படையும் நிலையிலும் காணப்படுவதாகவும் அது ரைரனில் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்...!

Huygens அனுப்பி இழக்கப்பட்ட கிட்டத்தட்ட பாதித் தொகைத் தகவல்களை மீளப் பெற முயற்சிகள் எடுக்கப்படும் என்றும்...இத்தரவிழப்பு தகவல் தொடர்புப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட கோளாறால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளதோடு..இந்த விண்ணியல் பயண வெற்றி குறித்து மகிழ்ச்சியும் வெளியிட்டனர்...!

மேலதிக தகவல் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 6:11 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க