Tuesday, February 01, 2005

வேகமாக ஆபத்தை எதிர்கொள்ளும் முருகைக்கற் பாறைகள்..!



முருகைக்கற் பாறைச் சூழற்தொகுதி உயிரினங்கள் சில...!

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் காபனீரொக்சைட் (CO2) வாயுவின் அளவு அதிகரித்துள்ளதால் நமது பூமியின் வளிமண்டலத்திலும் அதன் இருப்பு அதிகரித்துள்ளது...! இதனால் சூழல் வெப்பமுறுதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் என்று பல தொடர் பாதக பக்க விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஒரு தகவல் மேலும் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது...!

கடற்கரையோரங்களுக்கு அண்மித்து ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் உருவாகி கடலரிப்பில் இருந்து தரையைக் காத்து வரும் முருகைக்கற் பாறைகளும் (Coral reef) அவை சார்ந்த உயிரினங்களையும் பாதிக்கத்தக்க வகையில் கடலின் காரத்தன்மை குறைந்து அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன...! வளிமண்டலத்தில் CO2 இன் அளவு அதிகரித்துள்ளதால் அது கடல் நீரில் கரையும் அளவும் அதிகரித்து கடல் நீர் அமிலமாகும் தன்மை அதிகரித்து உலகில் இன்னும் கிட்டத்தட்ட 30 - 70 வருடங்களில் பல அரிய முருகைக்கற் பாறைச் சூழல் தொகுதிகள் ஆழிக்கப்படும் வாய்ப்பு உருவாகும் என்றும் அத்தகவல் மேலும் எச்சரித்துள்ளது...!

ஏற்கனவே மாலைதீவு உள்ளிட்ட இந்து சமுத்திரப் பிராந்திய முருகைக்கற் பாறைச் சூழல் தொகுதிகள் பல... கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பாதிப்புக்களைச் சந்தித்து வரும் இந்நிலையில் இந்தக் தகவலும் வெளியாகி இருப்பது சூழலியலாளர்களையும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களையும் வருத்தம் கொள்ளச் செய்துள்ளது...!

அபிவிருத்தி அடைந்த மற்றும் அடைந்து வரும் நாடுகள் தாம் வெளியிட்டு வரும் CO2 வின் அளவைக் உடனடியாகவே குறைக்க வழி சமைக்காவிடின் அது உண்டு பண்ணும் சூழற் பாதக விளைவுகளுக்கு வேகமாக உலகம் முகம் கொடுக்க வேண்டி வரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்...!

மேலதிக தகவல் இங்கு - ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 8:00 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க