Friday, April 15, 2005

நீங்கள் எங்கிருந்து எங்க வந்தீங்க...??!



மனித ஆண்களில் காணப்படும் Y நிறமூர்த்த டி என் ஏ யின் அடிப்படையில் மனிதக் குடிபெயர்வைக் காட்டும் படம்...! (10,000 பூர்வக்குடி மக்களிடமிருந்து பெறப்பட்ட டி என் ஏ மாதிரிகளின் பிரகாரம்..!
(பூர்வீகத்தைத் தொலைப்போரே...கவனம்...கணக்கில் எடுக்கப்படமாட்டீங்க உலகத்தில....! )

(Map shows first migratory routes taken by humans, based on surveys of different types of the male Y chromosome. "Adam" represents the common ancestor from which all Y chromosomes descended

Research based on DNA testing of 10,000 people from indigenous populations around the world)

உலகின் ஆதி மனிதன் யார்.... அவன் எங்கிருந்து எப்படியெல்லாம் குடிபெயர்ந்தான்...எங்கெங்கு எப்படியானவர்கள் வந்து சேர்ந்தார்கள்.. நவீன மனிதரில் பல வகைத் தோற்றத்துக்குமான காரணங்கள் காரியங்கள் என்ன...இவற்றை 5 வருடத் திட்டத்தின் கீழ் மரபணு ரீதியில் ஆய்வு செய்ய மனித வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் முடிவு செய்து பல இடங்களிலும் வாழும் பல்லின மனிதர்களிடத்திலும் இருந்து டி என் ஏ மாதிரிகளைப் பெறவுள்ளனராம்...! குறிப்பாக அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் வாழும் பூர்வக் குடிமக்களிடம் இருந்தும் டி என் ஏ மாதிரிகள் பெறத் திட்டமிடப்பட்டுள்ளன...!

(A project spanning five continents is aiming to map the history of human migration via DNA.)

இந்த ஆய்வுக்காக உலகம் பூராவும் வாழும் பூர்வக்குடி மற்றும் குடிபெயர்ந்து வாழும் கிட்டத்தட்ட 0.1 மில்லியன் மனிதர்களிடமிருந்து டி என் ஏ மாதிரிகள் பெறப்படவுள்ளன...!

இந்த ஆய்வின் போது ஆண்களில் தனித்துவமாகக் காணப்படும் Y நிறமூர்த்தம் மற்றும் இழைமணி என்று அழைக்கப்படும் கலப்புன்னங்கம் கொண்டுள்ள டி என் ஏ க்கள் (mitochondrial DNA ) பெரிதும் கருத்தில் கொள்ளப்படவுள்ளன...!

ஆய்வுகூடம் மூலமும் கணணிப் பகுப்பாய்வின் மூலமும் தொடரப்படவுள்ள 40 மில்லியன் செலவுள்ள இவ்வாய்வுக்கு முக்கிய ஆதரவு அளிப்போர் National Geographic, IBM மற்றும் Waitt Family Foundation charity...!

இவ்வாய்வின் மூலம் அடைய நினைக்கப்படும் முக்கிய குறிக்கோள்களை விரிவாக கீழே ஆங்கிலத்தில் பாருங்கள்...

Who are the oldest populations in Africa - and therefore the world?

Did Alexander the Great's armies leave a genetic trail?

Who were the first people to colonise India?

Is it possible to obtain intact DNA from the remains of Homo erectus and other extinct hominids?

How has colonialism affected genetic patterns in Africa?

Was there any admixture with Homo erectus as modern humans spread throughout South-East Asia?

Is there any relationship between Australian Aboriginal genetic patterns and their oral histories?

What are the origins of differences between human groups?

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 8:07 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க