Tuesday, October 31, 2006

மஞ்சளின் மருத்துவக் குணம் புதிய கண்டுபிடிப்பு



மஞ்சள் (Turmeric) கொண்டு சுவையூட்டப்பட்ட உணவு

ஆசியர்களின் சமையலில் மிக நீண்ட வரலாற்றுக் காலமாக சுவை சேர்த்து வந்த மஞ்சள், ஆர்திரைரிஸ் மற்றும் (rheumatoid arthritis and osteoporosis) சில வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய இரசாயனக் கூறுகளைக் கொண்டிருப்பது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இருந்து விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. இச்சமையல் சுவை கூட்டி இன்று மேற்கத்தேய உணவுகளிலும் குறிப்பிடத்தக்க இடம்பிடித்துள்ளது.

மஞ்சள் வேரினின்றும் பிரித்தெடுக்கப்பட்ட இரசாயனக் கூறிற்கு inflammation தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை (anti-inflammatory effect) உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இக்கூறு inflammation தாக்கத்தை ஏற்படுத்தும் புரத்தை உற்பத்தி செய்யும் ஜீன் அல்லது பரம்பரை அலகுகளை தூண்டும் பிறிதொரு புரதத்தின் (NF-KB ) செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவன் வாயிலாக இச்செயற்பாட்டைச் செய்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் பிரகாரம் மஞ்சளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இரசாயனத்தைக் கொண்டு புதிய மருந்துகளை குறிப்பிட்ட சில நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஆசிய நாடுகளில் பலகாலமாக இந்த மஞ்சள் பாவனையில் உள்ள போதும் ஆர்திரைரிஸ் நோய்த் தாக்கம் குறைந்து வந்துள்ளதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த நோய்க்கட்டுப்பாடு வெறும் உணவுப் பழக்கத்தால் வருவது அன்றி சரியான அளவில் சிகிச்சைகளின் மூலம் மஞ்சளில் உள்ள இரசாயனக் கூறுகள் உள்ளெடுக்கப்படுவதாலேயே நோய்த் தாக்கத்தைக் குறைக்க பயன்படுத்தப்பட முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 7:55 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க