Friday, August 17, 2007

காற்று மாசடைதலால் இளையவர்களும் பாதிப்பு.நாம் உயிர் வாழ உள்ளெடுக்கும் ஒக்சிசன் வாயு உள்ளடங்கிய வளிமண்டலம், கடந்த சில தசாப்தங்களாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளிவரும் நச்சு வாயுக்களினதும் தூசுகளினதும் காபனீரொக்சைட் வாயுவின் அளவு அதிகரிப்பாலும் மிக வேகமாக பாழடைந்து வருகின்றது.

இதன் தாக்கமும் மனிதரில் ( இளையவர்கள் உள்ளடங்க) இதயம் மற்றும் சுவாச நோய்களின் பெருக்கத்துக்கு காரணம் என்று சமீபத்திய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வாயு மண்டலம் அதிகம் மாசடைந்த இடங்களாக பெரு நகரங்கள் விளங்குகின்றன. இவ்வாறு மாசடைந்துள்ள நகரங்களில் வாழும் மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் இருந்து அவர்களிடம் மிக இளம் வயதிலேயே இதய மற்றும் குருதி செல்லும் பாதைகளில் உபாதைகள் ஏற்படுவது அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் நடக்க உள்ள ஒலிப்பிக் போட்டிகளைக் கூட, இந்த வாயு மண்டல மாசுறுதல் என்பது சர்ச்சைக்குள் இட்டுச் சென்றுள்ளது..!

இது மட்டுமன்றி சமீபத்தில் வெளியான இன்னொரு அறிக்கை ஒன்றில் உலகில் மனிதர்கள் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் மிக அதிகமாக அதிகரித்து வருகின்றது என்ற விடயமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்.. தேகப்பயிற்சி அற்ற செயற்பாடுகள்.. உப்பு மற்றும் கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவுக்கு அதிகமான உண்ணுதல், அற்ககோல் மற்றும் புகையிலைப் பாவனை.. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் கிரமமாக தங்கள் உடலை பரிசோதனை செய்ய மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரம் இங்கு - 1

மேலதிக விபரம் இங்கு - 2

பதிந்தது <-குருவிகள்-> at 7:57 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

Very sad news/fact. We need to take care of the environment.

Fri Aug 17, 11:22:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

ம்ம்.. லேற்றாத்தான் நம்ம சந்ததி புரிஞ்சு கொள்ளுது. இருந்தாலும்.. சூழலைப் பாதுகாக்க தேவையான மாற்றங்கள் வரனும். மக்கள் அதற்கு ஒத்துழைக்கக் கற்றுக்கொள்ளனும்.

சூழல் பாதுகாப்பு என்பது எல்லோரினதும் கடமை. ஆனால் இன்னும் அது தெளிவா உணரப்படல்ல..!

கவலையாகத்தான் இருக்கிறது.. இப்படியே போனால்.. பூமியில் மனிதன் மட்டுமல்ல..உயிரினங்களே இருக்குமோ என்பது..!

பூமியில் உயிரின அழிப்பை மனிதன் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.. என்ற செய்தியை.. ஒவ்வொருவருன் உணரனும். காரில் போகும் போது கூட சிந்திக்கனும்.. தனது எதிர்காலச் சந்ததிக்கு கேடு செய்து கொண்டுதான் பயணிக்கிறேன் என்பதைக் கூட..!

Fri Aug 17, 01:03:00 pm BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க