Thursday, October 11, 2007

மலேசியாவின் முதல் விண்வெளி வீரர்.



Malaysia's first cosmonaut Sheikh Muszaphar Shukor, left, Yury Malenchenko of Russia, center, and Peggy Whitson of the United States, right, crew members of the 16th mission for the International Space Station. மலேசிய வீரர்- இடது புறம்.

மலேசியாவின் முதல் விண்வெளி வீரரும் சத்திரசிகிச்சை நிபுணருமான 35 வயதே நிறைந்த இளம் மருத்துவ ஆய்வாளர் Sheikh Muszaphar என்பவர் ரஷ்சிய Soyuz TMA-11 விண்கலம் மூலம் Soyuz-FG உந்துவாகனத்தின் உதவியோடு விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 10 தினங்கள் தங்கி இருந்து நோய்களும் அவற்றின் மீதான மைக்குரோ கிறவிற்றியின்( microgravity )விளைவுகளும் மற்றும் விண்வெளிக் கதிர் வீச்சுக்கள் உயிர்க்கலங்களிலும் மரபணுக்களிலும் செய்யும் தாக்கங்களும் குறித்து ஆய்வுகளில் ஈடுபடவுள்ளார்.

இந்த மலேசிய வீரருடன் மேலும் இரு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கிப் பயணிக்கின்றனர். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான 16 வது பயணமாகும். அமெரிக்காவும் ரஷ்சியாவும் இணைந்து இந்தப் பயண எண்ணிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன.

மலேசிய வீரர் தனது பயணத்தின் போது மலேசிய உணவுகளை காவிச் செல்கிறாராம். அதில் வாழைப்பழமும் அடங்குகிறது.

மேலதிக தகவல் இங்கு.

மேலதிக தகவல் இங்கு -2

பதிந்தது <-குருவிகள்-> at 3:28 am

2 மறுமொழிகள்:

Blogger MyFriend விளம்பியவை...

நல்லதொரு தகவல். இதைப்பற்றிதான் நானும் எழுத முயற்சித்துள்ளேன். :-)

Thu Oct 11, 04:03:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தமிழ்மணத்தில் உங்கள் பதிவையும் பார்த்தான். மக்களுக்கு தமிழில் அறிவியல் விடயங்களை அளிப்பதில் நேரம் உள்ள வேளைகளில் நான் முயற்சிக்கிறேன். நீங்களும் உங்கள் முயற்சியை தொடர வாழ்த்துகின்றேன்.

வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

Thu Oct 11, 04:16:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க