Tuesday, October 23, 2007

மீண்டும் விண்ணேகும் டிஸ்கவரி.



டிஸ்கவரி விண்ணோடம்.

அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டிஸ்கவரி விண்ணோடம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான ஐரோப்பியப் பிரிவின் முக்கிய பாகம் ஒன்றைக் காவிக் கொண்டு மீண்டும் இன்று (23-10-2007) அமெரிக்க கெனடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணேக இருக்கிறது. இந்தப் பயணத்தில் வழமை போல 7 விண்வெளி வீரர்களும் பயணிக்கின்றனர்.



ஐ எஸ் எஸ் இல் உள்ள ஐரோப்பாவுக்கான பகுதியும் Harmony node களும் விளக்கப்படம்.

ஐ எஸ் எஸ்க்கான ஐரோப்பிய ஆய்வுகூடப் பிரிவான Columbus lab இல் இணைப்பதற்கு என்று இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட Harmony node என்ற முக்கிய பாகம் ஒன்றே இம்முறை எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தப் பாகம் தொடர்பில் ஐரோப்பிய விஞ்ஞானிகளிடம் கடும் எதிர்பார்ப்புள்ளது.

ISS என்ற சர்வதே விண்வெளி நிலையம் அமெரிக்கா கனடா ரஷ்சியா ஐரோப்பா ஜப்பான் என்று பல நாடுகள் சேர்ந்து தமக்கென்று தனிப் பிரிவுகளை உள்ளடக்கி விண்வெளியில் அமைக்கும் பிரமாண்டமான விண்வெளி ஆய்வு நிலையமாகும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 4:08 pm

1 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

சமீப காலமாக பல பயணங்கள் மேற்கொள்வதை பார்த்தால் ISS விரைவில் முடிந்துவிடும் போல் உள்ளது.அதற்குப்பிறகு இன்னும் பல ரகசியங்கள்/அதிசியங்கள் வெளி வரும்.

Wed Oct 24, 03:13:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க