Thursday, January 10, 2008

ஒளிரும் பன்றிக் குட்டி.



ஒளிரும் தன்மைக்குரிய புரதத்துக்கான மரபணுவை செலுத்தி இயல்பு மாற்றம் பெற்ற பன்றிக்கு, சாதாரணமாகப் பிறந்த பன்றிக் குட்டியில் ஒளிரும் பகுதிகளை புற ஊதாக் (UV) கதிர்ப்பின் கீழ் பார்வையிடுதல்.

சமீபத்திய தசாப்த காலமாக உயிரியல் மரபணு தொழில்நுட்பம் வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன் தொடர்சியாக..

கடந்த 2006 இல், பச்சை நிற ஒளிர்வைச் செய்யக் கூடிய புரதத்தை உருவாக்கும் மரபணுவை முளைய நிலையில் இருந்த பன்றிக்குள் செலுத்தி பெறப்பட்ட மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றி, தற்போது செயற்கையாகச் செலுத்தப்பட்ட குறித்த இயல்பை வழமையாகப் பிறந்த அதன் சந்ததிகளுக்கும் காவியுள்ளது.

இது மரபணுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். பன்றி போன்ற சிக்கல் தன்மையான மரபணு மூலக் கூறுகளைக் கொண்ட விலங்குகளில் கிடைத்திருக்கும் இந்த வெற்றியை கொண்டு மேலும் தொடரும் ஆய்வுகள் மூலம்,

மனிதன் உட்பட பிற விலங்குகளிலும் நோய்கள் மற்றும் பாதிக்கபட்ட உறுப்புக்களை சீர்செய்வது,மனிதனுக்கு தேவையான உறுப்புக்களைப் பன்றி போன்ற உயிரிகளில் பிறப்பிப்பது போன்ற உயிரியல் தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்பதுடன் குறித்த இயல்புகளை சந்ததிகளுக்கு கடத்தவும் செய்யலாம் என்று உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இப்பரிசோதனை வெற்றியை சீன ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கிடையே மனிதனில் நீரிழிவு நோயை உருவாக்கும் மரபணுவை பன்றிக்குள் செலுத்தி குறித்த பன்றி நீரிழிவு நோயைக் காவும் தன்மையை ஜப்பான் சென்ற ஆண்டில் வெற்றிகரமாகச் செய்திருந்தது.

இந்த வெற்றி மனிதனில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்த மேலதிக ஆய்வுகளைச் செய்ய முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

-------------

Glowing pig passes genes to piglets

BEIJING - A cloned pig whose genes were altered to make it glow fluorescent green has passed on the trait to its young, a development that could lead to the future breeding of pigs for human transplant organs, a Chinese university reported.

The glowing piglets' birth proves transgenic pigs are fertile and able to pass on their engineered traits to their offspring, according to Liu Zhonghua, a professor overseeing the breeding program at Northeast Agricultural University.

"Continued development of this technology can be applied to ... the production of special pigs for the production of human organs for transplant," Liu said in a news release posted Tuesday on the university's Web site.

மூலம்: AP and Yahoo.com

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:38 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க