Thursday, May 15, 2008

ஜெட் வேகத்தில் பறக்கும் மனிதன். (காணொளி இணைப்பு)



தானே வடிவமைத்த ஜெட் இயந்திரப் பொறிமுறையோடு இயங்கவல்ல hang-glider மூலம் சுவிஸ்லாந்தின் பனி படர்ந்த அல்ப்ஸ் மலைத் தொடர்களின் மேல் பறந்தார் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 48 வயதான Yves Rossy என்பவர். இவர் ஒரு படைத்துறை வீரராவார்.

விமானம் ஒன்றின் உதவியோடு குறித்த உயரத்தை அடைந்ததும் வான் வெளியில் குதித்து அதில் மிதந்தபடி தனது ஜெட் இயந்திரம் பூட்டிய hang-glider ஐ இயக்கிய Yves Rossy, அதி வேகமாக வான் வெளியில் பறந்து வான வேடிக்கை காட்டிவிட்டு, பரசூட்டின் உதவியுடன் மீண்டும் தரையைத் தொட்டார்.

இச்சாதனை மிகு பறப்பினை உலகு வியந்து பார்க்கின்ற அதேவேளை ஆதிகாலத்தில் இப்படி இறக்கைகளைக் கட்டி மனிதன் பறக்க முயன்று மனிதன் தோற்றுப் போயிருப்பினும் பின்னர் விமானப் பொறிமுறை, விண்ணோடப் பொறிமுறைகளைக் கண்டறிந்து வான் வெளியென்ன.. விண்ணிற்கே பறக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையும் இவ்வேளையில் மீள நினைவுபடுத்திக் கொள்வது நன்று.

காணொளிக்கான இணைப்பைப் பெற இங்கு அழுத்தவும்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:48 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

பதிவுக்கும் வீடியோ இணைப்புக்கும் நன்றி.

Thu May 15, 09:17:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க