Friday, May 02, 2008

மோசமான கிருமிகளை காவும் கணணி விசைப்பலகைகள்.


பார்த்தால் தெரியாது ஆனால் பாதிக்கக் கூடும். இது விடுகதை போல இருக்கலாம். ஆனால் உண்மை.

அதாவது கணினியில் நாம் செய்திகளை தட்டச்சு செய்யப் பயன்படுத்தும் தட்டச்சுப் பலகையில் (கீ போர்ட்டில்) இருக்கும் கிருமிகள், கழிவறையிலுள்ள கழிப்பிட இடத்தின் மூடியில் இருக்கும் கிருமிகளைவிட கூடுதலாக இருக்கின்றன என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவை விஷத்தன்மை கொண்டதாக மாற்றக் கூடிய ஈ கோலி (E.coli) என்று அழைக்கப்படும் நுண்கிருமியின் ஒரு வகை உட்பட பல வகையான நுண்கிருமிகள் லடசக் கணக்கில் ஒரு கீ போர்டில் (விசைப்பலகையில்) இருக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் பிரிட்டனிலுள்ள 30 அலுவலகங்களிலுள்ள கீ போர்ட்டை நுணுக்குக்காட்டியில் பார்த்தபோது அவர்களுக்கு தெரிந்தது அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு விடயம். அதாவது பார்த்தாலே பளிச் என்றிருக்கும் ஒரு கழிப்பறையின் டாய்லட் சீட்டில் இருக்கும் கிருமிகளை விட அதிக அளவில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கிருமிகள் இருப்பதை அந்த ஆய்வாளர்கள் கண்டார்கள்.

நன்றி: பிபிசி/தமிழ்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:10 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க