Saturday, May 31, 2008

அமேசன் காட்டுப் பகுதியில் ஆதிவாசிகள்.



பிரேசிலின் (பிரேசில் - பெரு எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில்) Acre பிராந்தியத்தில் அமேசன் காட்டுப் பகுதியில் நவகால மனிதர்களுடன் தொடர்பற்ற முறையில் வாழும் ஆதிவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.



விமானம் மூலம் அடர்ந்த அமேசன் காட்டுப் பகுதிக்கு மேலால் சென்று பிடிக்கப்பட்ட படங்களில், ஆதிவாசிகள் பெரிய இலைகுழைகளால் வேயப்பட்ட குடிமனைகள் அமைத்து வாழ்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.



விமானம் தம்மை நோக்கி வருவது கண்டதும் பல ஆதிவாசிகள் ஓடி ஒளிக்க, சில, உடலில் சிவப்பு நிற மை பூசிய ஆண் ஆதிவாசிகள் வில்- அம்பு கொண்டு விமானத்தை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.



ஆதிவாசிகள் மத்தியில் கறுப்பு நிற பெண் ஒருவரும் அவதானிக்கப்பட்டுள்ளார். இந்த ஆதிவாசிகள் பொதுவான தடிமன் மற்றும் சின்னம்மை போன்ற நோய்களுக்குக் கூட தாக்குப் பிடிக்கும் வல்லமையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:23 am

7 மறுமொழிகள்:

Blogger M.Rishan Shareef விளம்பியவை...

Wow..very intersting :)
Thanks !!

Sat May 31, 09:22:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

அவங்களையாவது நிம்மதியா இருக்கவிடணுமே..

Sat May 31, 02:14:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

ஆதிவாசிகள் இன்னும் இவ்வுலகில் வாழ்கின்றனர் என்பது அதிசயமாகத்தான் இருக்கிறது. அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களின் வாழ்விடங்களையும் அவர்களையும் அழிவில் இருந்து பாதுகாப்பது முன்னேறிவிட்ட மனிதர்களின் கடமை..!

நன்றி ரிசான்.

Sat May 31, 02:17:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

சரியாச் சொன்னீங்க.. தூயா பாப்ஸ்.

Sat May 31, 02:24:00 pm BST  
Blogger puduvaisiva விளம்பியவை...

it is not wonder kuruvi
in our Tamilnadu near surilimalai and Yercard interier

many Athivasi live their but their touch with our people.

puduvai siva

NP: I try the moving words but is not working kuruvi if possible you give any example HTML then I crate myself.

Sun Jun 01, 12:09:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி சிவா.

உங்களிற்காக.. cbox இல் ஒரு பதிலிட்டுக்கேன். அதை கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுங்கள். அங்கு அச்சொற்களை அசைவதைக் காணலாம்.

இல்லை என்றால் கீழ் உள்ள இணைப்பில் மேலதிக விபரங்கள் காணலாம்.

http://www.freecodesource.com/index.php?page=myspacecodes/marquees

நன்றி.

Sun Jun 01, 07:31:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

இது சிறப்பான செய்திகளுக்கு நன்றி!

- செழியா அரியாங்குப்பம்

Sun Jun 01, 04:53:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க