Monday, June 02, 2008

பைசா சாயும் கோபுரம் நிமிர்கிறது.



பைசா கோபுரம் - இத்தாலி.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பைசா நகர சாய்ந்த கோபுரம் ஒரேயடியாக சாய்ந்து விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நான்கு கோடி டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் பலனளித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக தற்போது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சாய்ந்த கோபுரமாது தனது 800 வயது சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முறையாக சாய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது என்று சோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளன.

சாய்வாக நிற்கும் உலகக் கட்டிடங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதான பைசா கோபுரத்தை சாயாமல் நிறுத்துவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்திருக்கிறன. கோபுரத்துக்கு அருகில் வடக்கு பக்கத்திலிருந்து பூமியைத் தோண்டி சுமார் எழுபது டன் மண்ணை எடுத்திருக்கிறார்கள்.

அப்படிச் செய்வதன் மூலம் கோபுரம் தானாக நிமிரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். மண்ணைத் தோண்டி எடுத்ததன் பின்பு எதிர்பார்த்ததைப் போலவே கோபுரம் நிமிரத்தொடங்கியது. ஏழு வருடங்களில் சுமார் 48 செண்டிமீட்டர் நிமிர்ந்துவிட்ட நிலையில், தற்போது அந்தக் கோபுரம் முற்றிலுமாக அசைவதை நிறுத்தியுள்ளது. அதன் 800 ஆண்டுகள் சரித்திரத்தில் அது நிலையாக நின்றிருப்பது இதுவே முதல் முறை என்று கட்டிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

source: bbc/tamil

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:47 am

6 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

//அப்படிச் செய்வதன் மூலம் கோபுரம் தானாக நிமிரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். மண்ணைத் தோண்டி எடுத்ததன் பின்பு எதிர்பார்த்ததைப் போலவே கோபுரம் நிமிரத்தொடங்கியது. ஏழு வருடங்களில் சுமார் 48 செண்டிமீட்டர் நிமிர்ந்துவிட்ட நிலையில், தற்போது அந்தக் கோபுரம் முற்றிலுமாக அசைவதை நிறுத்தியுள்ளது. அதன் 800 ஆண்டுகள் சரித்திரத்தில் அது நிலையாக நின்றிருப்பது இதுவே முதல் முறை என்று கட்டிட நிபுணர்கள் கூறுகின்றனர்.//

புதிய செய்தி.பகிர்ந்துகிட்டதிற்க்கு நன்றிகள் நண்பரே:)

Tue Jun 03, 01:31:00 pm BST  
Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

இப்படி செய்வதற்கு முன்பு பல யோஜனைகள் முயற்சித்து பார்த்தார்கள்.
நேஷனல் ஜியாகிரபியில் ஒரு முறை பார்த்த ஞாபகம்.

Tue Jun 03, 02:24:00 pm BST  
Blogger puduvaisiva விளம்பியவை...

குருவி நண்பருக்கு வணக்கம்,

நீங்கல் தந்த இனைப்பின் மூலம் நகரும் எழுத்துகள்
சோதித்து பார்த்தேன் சிறப்பாக இயங்குகிறது.

மிக்க நன்றி தோழா !!
அன்புடன்
புதுவை சிவா.
மற்றும் c.box ?? என்றால் என்ன அது எங்கு உள்ளது ??
{ you say the answer sent that C.box so I ask this question}

Tue Jun 03, 02:46:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி ரசிகன் மற்றும் வடுவூர் குமார் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு.

சிவா cbox என்பது எமது வலைப்பூவின் வலப்பக்க சைட்பாரில் (sidebar) உள்ள கருத்துப் பகரும் இடம்.

நீங்களும் அதில் கருத்துப் பகர்ந்திருக்கிறீர்கள். சைட்பாரில் பார்க்கவும் நன்றி.

Tue Jun 03, 04:53:00 pm BST  
Blogger Unknown விளம்பியவை...

அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்... நம்மவர்கள்..

Wed Jun 04, 12:16:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நல் வரவுகள் தூயவன்.

உண்மைதான். எம்மவர்கள் இருக்கும் அடையாளங்களையும் அசிங்கம் என்று தொலைக்க நிற்பவர்களாச்சே..!

தாய் மொழியைக் கூட பேசக் கூச்சப்பட்டு அந்நிய மொழியில் பீற்றர் விடுபவர்கள் எம்மவர்கள்..! அப்படி இருக்கேக்க...???!

Wed Jun 04, 08:45:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க