Tuesday, August 05, 2008

வர்த்தக ரீதியாக மீள்பிறப்பாக்கம் செய்யப்பட்ட நாய்க்குட்டி.



மீள் பிறப்பாக்கம் செய்யப்பட்ட நாய் குட்டியுடன் எஜமானி.

அமெரிக்காவைச் சேர்ந்த Bernann McKinney என்பவரின் விருப்பத்துக்குரிய ஆண் நாயின் செவியில் இருந்து பெறப்பட்ட மென்சவ்விலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட கலத்தின் கருவைக் கொண்டு, தென் கொரிய ஆய்வாளர்களால் மீள்பிறப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன 5 நாய்க்குட்டிகள்.

அவை அனைத்தும் மூலக் கலங்கள் பெறப்பட்ட அவற்றின் தந்தை நாயை ஒத்திருக்கின்றன. அவற்றின் தந்தை நாய் ஏலவே இறந்துவிட்டது. இருப்பினும் அதன் இயல்பில் விருப்புக் கொண்ட அதன் எஜமானி அதனைப் போன்ற குட்டிகளைப் பெற விரும்பி இருக்கிறார். அதன் கீழ் அந்த நாயின் செவியில் இருந்து பெற்ற மென்சவ்வை ஆய்வுசாலையில் பாதுகாத்து வைத்திருந்து மீள்பிறப்பாக்கல் செயற்பாட்டின் மூலம் பிறிதொரு பெண் நாயில் கருக்களை வளர்த்து இக்குட்டிகளை உருவாக்கி இருக்கின்றனர். ஐந்து குட்டிகளும் இரண்டு வெவ்வேறு பெண் நாய்களின் கருப்பையில் வளர்க்கப்பட்டுள்ளன.

வர்த்தக ரீதியாக இந்த நாய்க் குட்டிகள் தென் கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழக உயிரியல் தொழில்நுட்ப கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக அறவிடப்பட்ட கட்டணம் $50,000 ஆகும்.

மேலதிக தகவலும் காணொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:55 pm

4 மறுமொழிகள்:

Blogger puduvaisiva விளம்பியவை...

Hi kuruvi friend :)

I read this news really costly Thinking do like this but money is not only the matter she love how much that dog it is really amazzing

And last time I do one mistake my display name so it display Spider now itz corrected

Thank you for your indication that one.

ok bye kuruvi see you

Puduvai siva.

Tue Aug 05, 03:17:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி சிவா.

Tue Aug 05, 03:58:00 pm BST  
Blogger யாத்ரீகன் விளம்பியவை...

whew.. 50k $ !!!! .. so they have the technology ..

Wed Aug 06, 12:12:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

காசாதே கடவுளப்பா போய்.. காசுக்கே அறிவியலப்பா என்ற காலமாப் போச்சு. :))

நன்றி யாத்ரீகன் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்..!

Wed Aug 06, 03:50:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க