Wednesday, August 06, 2008

இவர்களுக்குள் கொட்டாவி விடுவதிலும் ஒற்றுமை.



பொதுவாக ஒரு மனிதன் கொட்டாவி (Yawn) விட்டால் அருகில் இருக்கும் மனிதர்கள் தாமாகவே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள். இந்த இயல்பு குரங்குகள் அடங்கும் பிறைமேற் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்களுடன் நெருங்கி வாழும் நாய் கூட மனிதர்கள் கொட்டாவி விட தானும் விட்டுக் கொள்வதை பல முறை நடைமுறை வாழ்க்கையில் கண்டிருப்பினும் ஆய்வு ரீதியாக மனிதர்களை ஒட்டி நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்ற உண்மை தற்போதே வெளிப்பட்டுள்ளது.

ஆய்வுசாலையில் ஒரு மனிதன் கொட்டாவி விடும் போது நாயும் அதனைப் பிரதிபண்ணிக் கொள்ளும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அசதி, களைப்பு, பசி போன்ற காரணங்களால் எழும் கொட்டாவியை ஏன் இன்னொருவர் பிரதிபண்ணுகிறார் என்பது இன்னும் விளங்க முடியாத அதிசயமாகவே இருக்கிறது..!

மேலதிக தகவலும் காணொளியும் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:25 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க