Friday, November 07, 2008

ஓசோன் படலத்துவாரம் 5வது பெரிய அளவை எட்டியுள்ளது.



மனிதன் வெளியிடும் மாசுப் பொருட்களால் பூமியின் இயற்கைத் தன்மை சிதைவடைந்து வருவது எல்லோரும் அறிந்த விடயமே. அதில் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புறஊதாக்கதிர்ப்புக்களை வடிகட்டும் ஓசோன் படலச் சிதைவும் உள்ளடங்கி இருக்கிறது.

இவ்வாண்டு (2008) பூமியின் தெந்துருவப் பகுதிக்கு மேலான வளிமண்டத்தில் ஓசோன் படத்தில் உள்ள துவாரத்தில் அளவு சென்ற ஆண்டை விட 5வது பெரிய அளவை எட்டி இருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்து சொல்லி இருக்கிறது.

இந்தத் துவாரம் இவ்வருடம் புரட்டாதித் திங்களில் சுமார் 10.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது.கடந்த ஆண்டு இது 9.7 மில்லியன் சதுர மைல்கள் என்ற அளவில் காணப்பட்டுள்ளது.

நாசா கடந்த 30 ஆண்டுகளாக பூமியின் வளிமண்டத்தில் stratosphere பகுதியில் காணப்படும் ஓசோன் படத்தில் உள்ள துவாரத்தின் அளவு குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஓசோன் படலத்தில் உள்ள துவாரத்தின் அளவு வருடத்தில் ஆவணித் திங்களில் அதிகரிக்க ஆரம்பித்து புரட்டாதி அல்லது ஐப்பசித் திங்களில் உச்ச அளவை அடைகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

நாசா நிறுவனத்தின் ஓசோன் படலத்துவாரம் பற்றிய பதிவு இங்கு.

மூலத் தகவல் கீழே ஆங்கிலத்தில்..

This year's Antarctic ozone hole is 5th biggest

NEW YORK – This year's ozone hole over Antarctica was the fifth biggest on record, reaching a maximum area of 10.5 million square miles in September, NASA says.

That's considered "moderately large," NASA atmospheric scientist Paul Newman said in a statement.

NASA has tracked the size of the hole for 30 years. Last year, it was 9.7 million square miles, about the size of North America.

The hole is an area of depletion in the stratospheric ozone layer, which blocks harmful ultraviolet rays from space. Created by human-produced gases, the ozone hole generally forms in August and grows to its maximum size in September or October before breaking up.

AP/Yahoo

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:14 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க