Friday, November 14, 2008

இந்தியாவின் நிலவுக்கான உபகலம் நிலவில் இறங்கியது.



சந்தரயான் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனை அண்மித்த சுற்றுப்பாதைக்குச் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், இன்று சந்தரயான் காவி வந்த 30 கிலோ எடையுள்ள நிலவில் தரையிறங்கு கலத்தை நிலவின் தரையில் வெற்றிகரமாக இறக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய மூவர்ணக் கொடியுடன் தரையிறங்கிய உபகலம், தான் தரையிறங்கும் போது பிடித்த சந்திரனின் மேற்பரப்புத் தோற்றம் பற்றிய ஒளிப்பதிவுகளுக்குரிய தகவல்களையும் பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறியத்தந்துள்ளனர்.



இந்திய உபகலம் பிடித்த சந்திரனின் மேற்பரப்புப் பற்றிய படம்-1

இக்கலம் சந்திரனின் காற்றுமண்டலத்தின் கட்டமைப்புக் குறித்த ஆய்விலும் ஈடுபட உள்ளது.

சந்தரயான் 1 தொடர்ந்து சந்திரனை மிக நெருங்கி (சந்திரனின் தரையில் இருந்து 100 கிலோமீற்றர்கள் உயரத்தில்) சுற்றியபடி அதனை ஆய்வுசெய்ய இருப்பதோடு சந்திரனின் தரைத்தோற்றம், கனிமங்களின் இருப்புப் பற்றிய முப்பரிமான தகவல் ஏட்டையும் தயாரிக்க தரவுகளை திரட்டி அனுப்ப உள்ளது. சந்தரயான் 1 இரண்டு ஆண்டுகள் இப்பணியில் தொடர்சியாக ஈடுபட இருக்கிறது.



இந்திய உபகலம் பிடித்த சந்திரனின் மேற்பரப்புப் பற்றிய படம்-2

இதற்கிடையே சந்தரயான் 1 பயணத்திட்டம் இதுவரை 95% வெற்றியளித்திருப்பதாகவும் இந்தியாவின் இரண்டாவது சந்திரனுக்கான பயணம் 2012 ஆண்டில் அமையும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

இஸ்ரோவின் தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:23 pm

2 மறுமொழிகள்:

Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

வணக்கம்.தகவலுக்கு நன்றி.கூடவே ndtv யில் ஒளிப்படமும் பார்த்துக்கொண்டுள்ளேன்.

Fri Nov 14, 10:49:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

இந்தியாவின் வெற்றி பெருமிதம் கொள்ள வைக்கிறது.

நன்றிகள் நடராஜன்.

Sun Nov 16, 07:10:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க