Tuesday, January 06, 2009

மூன்றாம் நிலை புகைப்பிடித்தலும் உடலுக்கு ஆபத்தானது.



புகைப்பிடித்தலால் வரும் பாதிப்புக்களின் நிலைகளை அடிப்படையில் இரண்டாக வகுக்கின்றனர்.

1. நேரடியாக புகைப்பிடிப்பவருக்கு வரும் பாதிப்புக்கள்.

2. புகைப்பிடிப்பவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்கள் சந்திக்கும் பாதிப்புக்கள்.

தற்போது மூன்றாம் நிலை புகைப்பிடித்தலால் உருவாகும் பாதிப்புக்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக சிகரெட் புகையில் இருக்கும் கூறுகள்.. தலைமுடி,உடைகள், சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களில் மற்றும் உபகரணங்களில் படிந்திருந்து அவை உடலினுள் உள்ளெடுக்கப்படுவதாலும் பாதிப்புக்கள் உருவாவதாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள், சிகரட் புகையில் இருக்கும் நச்சுக்கூறுகள் படிந்த பொருட்களை அதிகம் கையாள்வதால் அவர்களில் இப்பாதிப்பு அதிகமான இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

சிகரெட் குடிக்கும் அல்லது இன்னொருவர் விடும் புகையை உள்ளெடுக்கும் தாய்ப்பால் ஊட்டும் தாயின் தாய்ப்பால் மூலமும் குழந்தைகளுக்கு சிகரட்டில் உள்ள நச்சுக்கூறுகள் கடத்தப்பட்ட வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே புகைப்பிடிப்பவர்கள் குழந்தைகள் அல்லது சுகதேகிகள் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பதை குறிப்பாக வீடுகளில்,வாகனங்களில் மற்றும் புகைப்பிடிக்க தடுக்கப்படாத பொது இடங்களிலும் புகைப்படிப்பதைத் தவிர்ப்பது நன்று.

மொத்தத்தில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பதே பிடிப்பவருக்கும் நல்லது ஏனையவர்களுக்கும் நன்மை ஆகும்..!


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:56 pm

1 மறுமொழிகள்:

Blogger Unknown விளம்பியவை...

china

Sat Jan 10, 02:50:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க