Sunday, April 14, 2013

Stroke - பக்கவாதம்.

பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது.

முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும்.

இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்தோடு உயர் மன அழுத்தமும் இதனை ஊக்குவிக்கிறது..!

சரியான பாதுகாப்பு மற்றும் உடலியக்க இலகு வழிப்படுத்தல்.. வழிமுறைகளைப் பின்பற்றாத..தீவிர உடற்பயிற்சி மட்டுமல்ல.. கோப்பி அருந்துதல்.. தீவிரமாய் முக்கி மூக்குச் சிந்துதல்.. கூட பக்கவாதத்துக்கு வழி சமைக்கலாம். கடுமையாக முக்கி கக்கா (நம்பர் 2) போறது கூட ஆபத்தானது..! :)

Coffee, vigorous exercise and nose-blowing may trigger a stroke.

Drinking coffee, hard exercise and nose-blowing are the everyday activities most likely to raise blood pressure and cause a specific kind of stroke, doctors say.

மேலதிக இணைப்பு.

மேலும் இந்தக் காணொளியை காணுங்கள்..

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:50 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

எப்படி எந்த மூளையில் இருபது என்பதை தெரிவு செய்வது?

Sun Apr 14, 12:51:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க