Tuesday, December 25, 2007

அனைவருக்கும் விலங்கியல் - 1



ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல.

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது.

ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது.

இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

-----------



சீனாவில் சைபீரியப் பனிப் புலிகளுக்கு ஆபத்து

சைபீரிய பனிப் பிரதேச புலிக்குட்டிகள் இரண்டு சீனாவின் மிருகக்காட்சி சாலையில் குளிர்சாதனப் பெட்டிக்குள் இறந்து கிடந்தது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இவ்வகைப் புலிகள் அழிவின் விளிம்பிலுள்ள ஓர் இனமாகும். சைபீரியக் காடுகளில் இப்புலிகள் மொத்தமே 400தான் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஒரு சில நாட்களுக்கு முன்பாகத்தான் இன்னொரு சைபிரியப் பெண் புலியும் இதே மிருகக்காட்சி சாலையில் இறந்து கிடந்தது.

சீனாவில் புலிகளின் உடற்பாகங்கள் நாட்டு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ நற்குணங்களுக்காக மிகப்பெரிய விலைக்கு புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்படும் நிலை.

அரசு அனுமதியுடன் சுமார் ஒரு டஜன் தனியார் புலிப் பண்ணைகள் சீனாவில் செயல்படுகின்றன. அந்தப் பண்ணைகளில் பெரும்பான்மையானவற்றில் புலிகள் மிக மோசமான சூழலில் வைக்கப்பட்டுள்ளன என்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

bbc/tamil

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 4:59 pm

2 மறுமொழிகள்:

Blogger குலவுசனப்பிரியன் விளம்பியவை...

இன்றுதான் முதன் முதலாக உங்கள் பதிவுக்கு வருகிறேன். புதிய அறிவியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் பல ஆண்டுகளாக தந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் திரட்டிகளில் பெருத்த இரைச்சல்களின் இடையே இதுபோன்ற பயனுள்ள பதிவுகள் காணாமல் போய் விடுகின்றன.நல்ல பணி. வழ்த்துக்கள்.

Fri Dec 28, 02:48:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நண்பரே. உங்கள் போன்றோரின் ஆர்வமும் ஊக்கமுமே எம்மை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து வாருங்க படியுங்கள் பயனாளியாகுங்கள்..!

நட்புடன் குருவிகள்.

Sat Dec 29, 11:36:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க